கட
295
வரைவு கடாதல்

 
  வேளாண் மரபு விளக்கிய வாணன்மின் னார்கழல்சூழ்
தாளான் வளங்கெழு தஞ்சையன் னீர்சங்கந் தந்தநன்னீர்த்
தோளா மணியன்ன தொல்குல வோடையிற் றோன்றியபூ
வாளா அலத்தொடுப் பார்க்கெங்ங னேவந்து வாய்த்ததுவே.

(இ-ள்.) வேளாண்  குலத்தை   விளங்கச்செய்த   வாணனென்னும்   ஒளியார்ந்த
கழல்சூழ்ந்த  தாளையுடையவனது  வளம்பொருந்திய  தஞ்சையை ஒப்பீர்! சங்கம்
ஈனப்பட்ட    நல்ல    நீர்மையையுடைய    வடப்படாத   முத்தம்   போன்று
தொன்றுதொட்டு  வழுவில்லாது  வரப்பட்ட  குலமாகிய  ஓடையில்   தோன்றிய
பூ வறிதே அலர் தொடுப்பார்க்கு எவ்விடத்திலேயிருந்து வாய்த்தது என்றவாறு.

பூவின்றி அலர்தொடுப்பார்க்கு ஒரு பூ வந்து வாய்க்கில் எவ்வாறு   அலர்தொடார்
என்றவாறாயிற்று.   மரபு - குலம்.   மின் - ஒளி.   தோளாமணி - தொளைபடா
முத்தம்.  பூ - திங்கடோறும்  வரும்  மாதர்சூதகம்.   வாளா - சும்மா.   `சங்கந்
தந்தநன்னீர்`  என்பதனை `மலர்ச் சந்தநன்னீர்`  என்று  பாடமோதி,  வெண்மலர்
போன்ற  அழகையுடைய  முத்தமென்ற  பொருள்  கூறுவாருமுளர்.    இவ்வாறு
செவ்வணி யணிந்து சேடியை விடுத்தல் உலகின்கண் வழக்க மின்றெனின்,  புலவர்
நாட்டப்பட்ட செய்யுள் வழக்கமெனக் கொள்க.
(382)    
பரத்தையர்கண்டு பழித்தல்:
பரத்தையர்  கண்டு  பழித்தல் என்பது, அச்சேரியிற்போய் சேடியைப்  பரத்தையர்
கண்டு பழித்துக் கூறல்.
  படியொன்று சாலி யனையவர் சேரிப் படர்பவளக்
கொடியோன்று நீல மலர்ந்தது காட்டக்கொடியவெம்போர்
வடியொன்று கூரிலை வேல்வல்ல வாணன்தென் மாறையிற்பொற்
றொடியொன்று தோண்மட வார்சேரி வாய்வந்து தோன்றியதே.

(இ-ள்.) புவியிற்  பொருந்திய    நெற்போன்றவர்   சேரியினின்றும்   நடந்துவந்த
பவளக்கொடி  யொன்று நீலம் பூத்ததைக் காட்டும் பொருட்டுக் கொடிய வெவ்விய
போரைச்  செய்யப்பட்ட  வடித்தற்  றொழில்  பொருந்திய  கூரிய இலைபோன்ற
வேற்றொழில்    வல்ல    வாணன்   தென்மாறையில்   பொற்றொடி   யணிந்த
தோளையுடைய மடவார் சேரியிடத்து வந்து தோன்றிற்று என்றவாறு.

படி - புவி.    சாலியனையவர் - இற்கிழத்தியாகிய   தலைவி.    படர்தல் - அச்
சேரியினின்றும்  இச் சேரியில்  வருதல்.  நீலம் - பொய்; பவளக்கொடி நீலமாதல்
பொய்   என்பதுபற்றிக்   கூறினார்.   எனவே,   தலைவி    பொய்யடையாளஞ்
செய்தனுப்பியதெனப்  பழித்துக்     கூறியவாறு    காண்க.     வடி - வடித்தல்.
அகவணியாகிய நாணம் முதலிய குணங்கள் இல்லாமையான்