|
|
புபுவணியுடையார் என்பது தோன்ற, `பொற்றொடி யொன்று தோள்மடவார்` என்று கூறினார். |
(383) |
பரத்தைய ருலகியல்நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு வந்து வாயில்கள் மொழிதல்: |
பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு வந்து வாயில்கள் மொழிதல் என்பத, தலைவி நீராடிய ஞான்று பரத்தையர் தங்கள் சேரியில் தலைவ னிருத்தல் உலக முறைமைக்கு இயலாதென்று விடுத்தலின், தலைவன் வருதலைக் கண்டு வந்து தாதிகள் பாங்கிக்கு மொழிதல்.
|
| வாருத்து பச்சிள நீர்முலை யார்மதன் வாணன்தஞ்சை யாருந் தொழத்தகு மெம்பெரு மாட்டிதன் னேவலினால் சேரும் பரத்தையர் சேரியி லேசென்ற சேடியைக்கண் டூருந் திரைப்புன லூரன்வந் தானின் றுலகியற்கே.
|
(இ-ள்.) கட்டிய கச்சைப் பூரித்துத் தள்ளப்பட்ட பசிய இளநீர் போன்ற முலையார்க்கு மதனையொத்த வாணன் தஞ்சையில் கற்பினால் யாவரும் தொழத்தகும் எம்பெருமாட்டி தனதேவலினால் முன் தலைவன் போய்ச்சேரும் பரத்தையருடைய சேரியிலே சென்ற சேடியைக் கண்டு ஊரப்பட்ட அலையையுடைய புனல் சூழ்ந்த ஊரன் இன்று உலகியற்கு வந்தனன் என்றவாறு. |
வார் - கச்சு. திரை - அலை. புனல் - நீர். உலகியல் - தலைவி நீராடிய ஞான்று தலைவன் பரத்தையிற் பிரியாமை தரும் நூலியல்பு. |
(384) |
வரவுணர் பாங்கி யரிவைக் குணர்த்தல்: |
| தள்ளா வளவயல் சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல் உள்ளா துணைப்பண் டகன்றன ராயினு முளளியிப்போ தெள்ளாது வந்துன் கடையினின் றார்நம் மிறைவர்குற்றம் கொள்ளா தெதிர்கொள்வ தேகுண மாவது கோமளமே.
|
(இ-ள்.) கோமளமே, நம்மிறைவர், தள்ளாத வளத்தையுடைய வயல்சூழ்ந்த தஞ்சைவாணன் தரியலர்போல், உன்னை நினையாது முன்பு சென்றன ராயினும் இப்போது நினைத்து இகழாது வந்து உன் கடைவாசலில் நின்றனர்; அவர்செய்த குற்றத்தை மனத்திற் கொள்ளாமல் எதிர்கொள்வதே குணமாவது என்றவாறு.
|
தள்ளா - நீங்காத. உள்ளாது - நினையாது. பண்டு - முன்னம். உள்ளி - நினைந்து. கடை - கடைவாசல். கோமளம் - இளமை யழகு. |