|
|
`உன்னையுள்ளாது` எனவும், `இப்போதள்ளி` எனவும் இயையும். |
(385) |
தலைவனைத் தலைவி யெதிர்கொண்ட பணிதல்: |
| மருவிற் பெருநல மன்னுவ தாந்தஞ்சை வாணன்வெற்பர் ஒருவிற் பசலை யுருக்குவ தாநமக் கூடலெவ்வா றிருவிற் புருவ விளங்கொடி யேயெய்து மெய்தலில்லாத் திருவிற் புனைநறுந் தார்வரை மார்பர் திருமுனின்றே.
|
(இ-ள்.) இரண்டு விற்போன்ற புருவத்தையுடைய இளங்கொடியே! தஞ்சைவாணன் வெற்பர் நம்மை மருவினராயின் பேரழகு நிலை பெறுவதாம்; அவர் நீங்கின் பசலைநிறமும் உருக்குவதாம்; இத் தன்மையாகிய நமக்கு ஊடலெவ்வாறு, விடுதலில்லாத் திருவைப் போல அணியப்பட்ட நறிய தாரை யணிந்த வரைபோன்ற மார்பர் திரு முன்னின்ற பணிதும் என்றவாறு.
|
நலம் - அழகு. ஒருவுதல் - நீங்குதல். எய்தும் - பணிதும். எய்தல் - விடுதல். இன் உருபு ஒப்புப் பொருண்மைக்கண் வந்தது. புனைதல் - அணிதல். திருமுன் தகுதி வழக்கு. எய்தும் என்றது பணிதும் என்னும் பொருள் கொள்ளுமோ எனின், தேவர் கூறிய கடவுள் வாழ்த்தில்,
|
| 1`தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே`
|
என்பதனில், சேர்தும் என்பதற்கு வணங்குதும் என நச்சினார்க்கினியர் உரை எழுதினார். சேர்தும் என்பதம் எய்தும் என்பதும் ஒரு பொருட்கிளவியாதலால், எய்தும் என்பதற்குப் பணிதும் எனவே பொருள் கொள்க. |
(386) |
புணர்ச்சியின் மகிழ்தல்: |
| மன்னவர் காம நெடுங்கடல் வாணன்தென் மாறையன்னாள் தொன்னலம் வார்முலை மத்தந் தழீஇடத்தடந் தோளிணையாம் பன்னக நாணிற் கடைத்திகழ் வார்திரைப் பட்டநன்னீர் இன்னமிழ் தார்ந்திமை யோரமை யாவின்பம் எய்தினரே.
|
(இ-ள்.) தலைவர் காதலாகிய நெடுங் கடலில் வாணன் தென்மாறையன்னாளது அழகு பழகிய வார்முலையாகிய மத்தைத் தழுவிய பெரிய தோளிணையாகிய பன்னக நாணினாற் கடைந்து, இதழின்கண் நெடிய அலையால் உண்டாகப்பட்ட நன்னீராகிய இனிய அமுதத்தை ஆர்ந்து இமையோரது தெவிட்டாத இன்பத்தை யெய்தினர் என்றவாறு
|
|
1. சிந்தாமணி. கடவுள் வாழ்த்து - 1. |