|
|
நலம் - அழகு; தொல் - பழைமை; மாறிப்பொருள் கொள்க. மத்தம் - மத்து. பன்னகம் - பாம்பு. திரை - அலை. அமையா - தெவிட்டா. வற்ற : கவிக்கூற்று.
|
களவிற்புணர்ச்சி யெல்லாம் தலைவன் வற்றாய் நிகர்த்தி இப்புணர்ச்சி கவிக்கூற்றாயினவாறு என்னையெனின், தலைவி நாணுடையளாதலால் தலைவி செயலின்றித் தலைவன் செயலாய் முடிதலின் தலைவன் கூற்றாய் நிகழ்ந்தது; கற்பியல் அவ்வாறன்றி இருவர் செயலும் ஒத்து நிகழ்தலின் இருவர் கூற்று ஒரு கவிக்கண் கூறலாகாமையின் கவிக்கூற்றாய் நிகழ்ந்தவாறு காண்க. |
(387) |
வெள்ளணி யணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல்: |
வெள்ளணி அணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல் என்பது, தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடிய செய்திக்கு அடையாளமாகிய வெள்ளாடை முதலியன அணிந்து சேடியை விடுப்புழி அச்சேடியை வாயிலாகத் தலைவன் வேண்டிக் கூறல்.
|
| என்பாற் குறையை நினைந்து மறாதெதிர் கொள்ளவல்லே1 தன்பாற் புலவி தணிகென்ற நீதஞ்சை வாணன்வையம் அன்பாற் பரவும் புகழுடை யானரு ளேயனையாய் உன்பாற் புலவி யுறாள்வண்ண வார்குழ லொண்ணுலே.
|
(இ-ள்.) வையம் அன்பாற் பரவும் புகழுடையானாகிய தஞ்சைவாணனது அருளைப்போல்வாய்! அழகு பொருந்திய வார்தந்த குழலையுடைய ஒண்ணுதலாள் நின்னிடத்தில் புலவியையுறாள்; ஆதலால் என்னிடத்தில் குறையை நினைந்து மறாதவண்ணம் எதிர்கொள்ள நீ விரைந்து சென்று அவனிடத்துப் புலவியை ஆறச்செய்வாய் என்றவாறு.
|
| 2`செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை`
|
என்பதனாறிக. புலவி - ஊடல். வையம் - உலகு. பரவுதல் - துதித்தல். ஒண்ணுதல்: ஆகுபெயர். |
(388) |
|
1. வல் - விரைவு. |
2.குறள். பிரிவாற்றாமை - 1. |