|
|
விருந்துகண்டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச் சீறேலென்றவள் சீறடி தொழுதல்: |
| தெரியோர் பொருட்டன்று தேர்வின்றி யூடரல் செயிர்த்தவர்க்குக் கரியோர் தெளித்தென்ன காரணங் காட்டுவர் காணுண்டுதேன் வரியோர் தொடைப்புயன் வாணன்தென் மாறை மலர்த்திருவே பெரியோர் பொறுப்பரன் றேசிறி யோர்கள் பிழைத்தனவே. |
(இ-ள்.) மணத்தை உண்டு வண்டுகள் பண்ணை வாசிக்கும் மாயையை யணிந்த புயத்தையுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்குந் திருவை யொப்பாய்! ஆராய்ச்சியின்றி ஊடுதல் ஒருபொருளை யுடைத்தன்று, தெளிவாயாக, கோபித்த வாக்கால் ஆற்றுதலின்றிச் சான்றாயுள்ளோர் தெளிவித்து என்னை காரணங் காட்டுவர், என்னிடத்துக் குற்றம் உண்டாயினுங் சிறியோர்கள் பிழைத்தன செய்தக்கால் பெரியோர்கள் பொறுப்பர், ஆதலால் யான் தொழுகின்றேன், என் பிழையைப் பொறத்தருள வேண்டம் என்றவாறு. |
`ஊடலோர் பொருட்டன்ற தேர்` என மாறுக. செயிர்த்தவர் - கோபித்தவர். கரியோர் - சான்றோர். கான் - மணம். தேன் - வண்டு. வரி - பண். ஓர்தல் - ஈண்டு வாசித்தல். தொடை - மாலை. அன்றும், ஏகாரமும், அசைநிலை. `சீறடி தொழுதல்` என்னுங் கிளவிப் பொருளானும், வருஞ்செய்யுளில், `என்பாத மிறைஞ்சுதல்` என்ற தலைவி கூறுதலானும், `தொழுகின்றேன்` என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது.. |
(397) |
| இஃதெங்கையர் காணின் நன்றன்றென்றல்: |
இஃது எங்கையர் காணின் நன்று அன்று என்றல் என்பத, எங்கையராகிய பரத்தைமார் காணின் நீர் செய்த பணிவு குற்றமாய் முடியும் என்றல். |
| எண்போன நெஞ்சமு நீருமென் பாத மிறைஞ்சுதல்நுங் கண்போலு மெங்கையர் காணினன் றோகயன் மாதிரத்துத் திண்போ தகந்தொறுந் தீட்டிய வாணன் செழுந்தஞ்சைசூர் வண்போ தளவிய நீர்வையை நாட்டுறை மன்னவரே. |
(இ-ள்.) கயற்கொடியைத் திக்குளில் இருக்குந் திண்ணி யானைகடோறும் எழுதிய வாணன் செழுமையையுடைய தஞ்சையைச் சூழ்ந்த வளவிய போது கலந்துவரப்பட்ட நீரையுடைய வைகைநாட்டில் உறையும் மன்னவரே! என்னை எண்ணுதல்போன நெஞ்சமும் நீரும் என்பாதம் வணங்குதலை நுமக்குக கண்ணையொக்கும் எனக்குத் தங்கையராகிய பரத்தையர் காணின் நன்றோ என்றவாறு. |