கட
தஞ்சைவாணன் கோவை
304

 
எண் - எண்ணுதல்.  இறைஞ்சதல் - வணங்குதல்.  எங்கையர் - என் தங்கைமார்.
`நன்றோ` என்புழி,  ஓகாரம் : எதிர்மறை. கயல் : ஆகுபெயர்.   மாதிரம் - திக்கு.
போதகம் - யானை. தீட்டல் - எழுதல். அளவுதல் - கலத்தல்.
(398)    
அங்கவர் யாரையு மறியேனென்றல்:
 மன்னும் புலவியை மாற்றியுந் தேற்றியும் வல்லவண்ணம்
இன்னுந் தெளிந்திலை யென்னேயென் னேயென்செய் கேனிதற்கு
முன்னம் படிந்து முழுகுநன் னீர்க்கங்கை முன்னுறையும்
அன்னம் படியுங்கொ லேர்உவ ராழியி லாரணங்கே.
(இ-ள்.) உயிரனையாய்!  தண்ணிய  மாலையணிந்த   வேலையுடைய    பெருமை
பொருந்திய   வாணனது   அழகிய   தஞ்சை    வெற்பிடத்து     வண்டார்ந்த
குழலையுடையாளது நிறமம் கண்ணும் வடிவும முன்னாள்  கண்டார்க்கு  இப்போது
வேறுபட்டிருத்தலால் அறியுந்  தன்மையனவே  யல்ல; இவ்வடிவு  வேறுபடுதற்குக்
காரணம் ஒன்ற உண்டு, ஆதலால் அக்காரணத்தை ஐயுறாமல் எனக்கு உரைப்பாய்
என்றவாறு.

(இது பிறசெய்யுட்கவி)
(399)    
காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல்:
 போயே தெருவில் தனிவிளை யாடும் புதல்வற்புல்ல
நீயே திலையல்லை நின்மக னேயிவன் நீயுமவன்
தாயே வருகெனச் சேயன்ன வாணன் தமிழ்த்தஞ்சைமான்
ஏயே யெனநிற்ற லானறிந் தேன்தன்னை யெங்கையென்றே.
(இ-ள்.) மகிழ்ந! முருகவேளையொத்த வாணன் தமிழ்த் - தஞ்சையிலிருக்கும் மான்
போன்ற பரத்தையானவள்  தெருவிற் போய்த் தனியே விளையாடும் புதல்வனைத்
தழுவி  யெடுத்தலைக் கண்டு யான்,  நீ அயலாளல்லை நினக்கு மகனே   இவன்,
நீயும்  அவன்  தாயே,  வருக   என்றழைக்க,   அவள்   அம்மொழி   கேட்டு
நாணத்தினால்  ஏயேயென  நிற்றலான்  அவள்  தன்னை எங்கையென்றறிந்தேன
என்றவாறு.   மகிழ்ந   என்பது    முன்னிலை    எச்சம்.    புதல்வன் - மகன்.
புல்லல் - தழுவல்.    ஏதிலர் - அயலார்.    சேய் - முருகன்.    ஏயே என்பது,
நாணத்தின் வந்த - அடுக்குமொழி. எங்கை - எனக்குத் தங்கை,
(400)    
தலைவியைப் பாங்கி தணித்தல்:
  மாவா ரணமன்ன வாணன்றென் மாறைநம் மன்னர்நின்னைப்
பாவாய் பணியவும் பார்க்கிலை நீயிடப் பாகமங்கை
தாவாத சங்கரன் கங்கைதன் கொங்கை தழீஇயிதழிப்
பூவார் சடைமுடி மேல்வைத்த போதும் பொறத்தனளே.

     (இ-ள்.) பாவை போன்றவளே!  பெரிய யானையொத்த வாணன் தென்மாறை
நாட்டில் நம் மன்னர் நின்னைப் பணிதலைச் செய்யவும்  நீ  பார்க்கிலை; சங்கரன்
இடப்பாகத்தை நீங்காத அம்பிகை,  சங்கரன் கங்கைதன்  கொங்கையைத்  தழுவிக்
கொன்றைப் பூவார்ந்த சடை முடியின்மேல்  வைத்தபோதும்  பொறுத்தனள்,  இது
கேட்டிலையோ என்றவாறு.