|
|
புள்ளிருக்கும்; ஒழிந்த பூவில் இராதெனப் பொருள் கொண்டவதனான், தலைவன் தன்னிடத்தல்லது பரத்தையர்பால் செல்வான் அல்லனென்பதாக உள்ளறையுவமம் தோன்றியவாறுணர்க. `வள்ளங் காமலமலர் அன்னப்புள்ளம்புனல்` எனக் கூட்டுக. |
(404) |
மணந்தவன் போயபின் வந்த பாங்கியோடிணங்கிய மைந்தனை யினிதிற் புகழ்தல்: |
| இருமையி லேயும் பயன்களெல் லாந்தன்னை யீன்றநமக் கொருமையி லேவந் துறத்தகைந் தான்மைந்த னொண்சுடர்போல் வருமயி லேகொண்டு மாதடிந் தானன்ன வாணன்தஞ்சைத் திருமயி லேயனை யாய்புனி லூரனைத் தேருடனே. |
(இ-ள்.) ஒள்ளிய ஞாயிறுபோல் ஒப்புச்சொல்லவரும் வேல் கொண்டு மாமரமாக நின்ற சூரனை வெட்டிய முருகவேள் போன்ற வாணன் தஞ்சை நகரிலிருக்கும் அழகிய மயில் போன்றவளே! மைந்தன் இம்மை மறுமைகளில் தரும் பயன்களையெல்லாம், தன்னைப்பெற்ற நமக்கு, ஒருமையாகிய இப்பிறப்பிலே வந்து பொருந்தப் பரத்தையர் சேரிக்குப்போம் புனலூரனைத் தேருடனே தகைந்து மனைக்கு அழைத்துக்கொண்டு வந்தனன் என்றவாறு. |
இருமை - இம்மை மறுமை. ஒருமை - இப்பிறப்பு. உறுதல் - பொருந்துதல். சுடர் - ஞாயிறு. அயில் - வேல். ஏகாரம் : அசை நிலை. தடிதல் - வெட்டுதல்; |
1`சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல்` |
என்பதனானுணர்க. `மைந்தனிருமையிலே` எனவும், `வந்துறப் புனலூரனதை் தேருடனே தகைந்தான்` எனவும் மாறுக. |
(405) |
தலைவி தலைவனைப் புகழ்தல்: |
| கொண்டானில் துன்னிய கேளிர்மற் றில்லைக் குறிப்பினென்று தண்டா தவர்சொன்ன சால்புகண் டேன்தல மேழ்புரக்கும் வண்டார் மலர்ப்புயன் வாணன்தென் மாறை மகிழ்நர்முன்னாள் உண்டா கியபழங் கேண்மையிந் நாளும் ஒழிந்திலரே. |
(இ-ள்.) தலம் ஏழையுங் காக்கும் வண்டார்ந்த மாலையணிந்த புயத்தையுடைய வாணன் தென்மாறையிலிருக்குந் தலைவர் முன்னாள் உண்டாகிய பழகிய நண்பு இந்நாள் வரைக்கும் ஒழிந்திலர்; ஆதலால், கருதுமிடத்துக் கணவனினும் அணித்தான கேளிர இல்லையென்று |
|
1. திருமுரு - 46. |