கட
தஞ்சைவாணன் கோவை
244

 
அறிவில்நீங்காத பெரியோர் சொன்ன மாட்சிமையை இன்று கண்டேன் என்றவாறு.
பாங்கி : முன்னிலையெச்சம். கொண்டான் - கணவன். உடலும் உயிரும்  நெஞ்சும்
அன்பும்  ஒன்றாய்க்  கலந்த  தன்மை  தந்தை  தன்னையர்   முதலாயினோர்க்கு
இல்லையாதலால்,     `கொண்டானிற்  றன்னிய  கேளிர்மற்  றில்லை`     என்று
கூறினாளென்றுணர்க.
தன்னுதல் - கிட்டுதல்.  கேளிர் - சுற்றத்தார்.  மற்று : அசை. குறித்தல் - கருதல்.
தண்டாதவர் - நீங்காதவர்.  சால்பு - மாட்சிமை.  மலர் : ஆகுபெயர். மகிழ்நர் -
கணவர். கேண்மை - நட்பு.
(406)    
பாங்கி மனைவியைப் புகழ்தல்:
  சிறந்தார் புகழ்தருந் தீம்புன லூரன்செய் தீமையெல்லாம்
மறந்தார்வ மெய்தி வணங்குத லாலிவள் வாணன்றஞ்சை
நிறந்தர் ரகையன்ன நித்திலம் போலு நெடுங்குலத்தில்
பிறந்தார் நிறைந்தகற் போர்வடி வேபெற்ற வெற்றியளே.
(இ-ள்.) இத் தலைவி மிக்காயினோர்  புகழ்தரும்  இனிமையாகிய புனலூரன் செய்த
தீமையெல்லாம் மறந்து  விருப்பமுற்ற  அவன்  அத்தன்மையன்  என்ற  கருதாது
வணங்குதலான்  வாணன்  தஞ்சை  நகரின்கண்   ஒளியின்   தாரகை   யொத்த
முத்துப்போல்     உயர்    குலத்திற்    பிறந்த    மடவாருடைய     நிறைந்த
கற்பிலக்கணமெல்லாம் ஒருருவாகப் பெற்ற பெற்றியள் என்றவாறு.

சிறந்தார் - மிக்கோர்.
     1"உலக முவப்ப வலனேர்பு திரிதரு"
     2"பகல்கான் றெழுதரு"
என்பனபோலப்,  `புகர்தரு`  என்பது  ஒரு சொல்.  ஆர்வம் - விருப்பம். நிறம் -
ஒளி. நெடுங்குலம் - உயர்குலம்; நெடுமால் என்பது போல.

இச்சொன்ன  கிளவிகளெல்லாம்,  `வாயில்வேண்டல்`  முதல்  நான்கு  வகைக்கும்
ஒக்குமாறு அறிந்தகொள்க.
(407)    
பரத்தையிற் பிரிவு முற்றிற்று.

1. திருமுரு - 1.
2. பெரும்பாணாற்றுப்படை - 2.