கடலாதலானும், தேவருக்கு அமுதங் கொடுத்ததாதலானும், நெடுமால் பள்ளிகொண்ட இடமாதலானும், `திருப்பாற்கடல்` என்று கூறப்பட்டது.
|
இவ்வாறு தலைவியும் ஐயுறாதது என்னையெனின், ஐயுறின், `கந்திருவனோ! முருகவேளோ!` இயக்கனோ! என ஐயுற வேண்டும். அங்ஙனம் ஐயுறவே, அச்சந்தோன்றும்;தோன்றவே, காமவேட்கை நிகழாது.ஆதலால், கூறிற்றிலர் எனக் கொள்க.
|
(2) |
துணிவு: |
துணிவு என்பது, கண்ணி வாடுதல் கண் இமைத்தல் முதலிய குறிகளான் மானிடமாதே யென, முன் ஐயுற்ற தலைமகன், தெளிந்து கூறல்.
|
| மையார் குவளை வயல்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல் நையா தொழிமதி நன்னெஞ்ச மேஇனி நம்மினுந்தன் நெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலஉண்கண் கையால் அழைப்பன போலிமை யாநிற்கங் காரிகைக்கே.
|
(இ-ள்.) நல்ல நெஞ்சமே, இக்காரிகைக்கு நம்மினும் தனது நெய்யார்ந்த கருங்குழலில் சூடிய செம்மலர் வாடின; அன்றியும் நீலம் போன்ற மையுண்ட கண் கையினார் வாவென்று அழைப்பன போலும் இமையாநின்றன; ஆதலால், கருமைபொருந்திய குவளை மலர்ந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத தெவ்வர்போல நீ இனி நையாதொழிவாயாக.
|
மதி: முன்னிலையசை, உன் கண் - மையுண்ட கண். நெய் - புழுகு.
|
| 1`நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினாற் பொய்கைகள்பூம்படாம் போர்த்தல் போன்றவே`
|
என்றார் பிறருமென்க. |
(3) |
குறிப்பறிதல்: |
குறிப்பறிதல் என்பது, தலைவி வேட்கை, அவள் பார்வையால் தன்னிடத்து உண்டென்று குறிப்பால் அறிவது.
|
| மண்ணிற் சிறந்த புகழ்த்தஞ்சை வாணன் மலையவெற்பில் பெண்ணிற் சிறந்தஇப் பேதைதன் பார்வை பெருவினையேன்- எண்ணிற் சிறந்த இருந்துயர் நோய்தனக் கின்மருந்தாய்க் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யாவதுங் காட்டியதே.
|
|
1. சிந்தா. நாமக - 51.
|