கட
தஞ்சைவாணன் கோவை
312

 
(இ-ள்.) உலகத்தில்  நிலைபெற்ற  உயிர்களைக்  காக்கின்ற காவலனாகிய வாணன்
தென்மாறையில் ஏந்திழையாய்!  நெஞ்சை  யுலர்த்தி  அச்சத்தை  வீசும் வாடைக்
காற்றுக்  கொடியதாகிய  பனிநீரிலே  குளிரைக்  குழைத்துப்  பின்  யான்  மூச்சு
விடாமல்  என்மேற்  பூசுநாளினுங்   காவலர்வந்து   என்   உயிரை   அளியார்,
இனிப்பேசுவது என்என்றவாறு.

புலர்த்தல் - உலர்த்தல்.  கொன் - அச்சம்.  உயிர்த்தல் - வீசுதல்.   உயிராமல் -
மூச்சுவிடாமல் `பூசுநாளுங் காவலர் வந்தளியார் பேசுதென்` என இயையும்.
(412)    
தோழி ஆற்றுவித்தல்:
  வரற்கால மென்றென் றெனப்பல கூடல் வளைத்துதிரம்
விரற்கால இன்று மெலியன்மின் னேசென்று மேதினிகாத்
துரற்கால குஞ்சர மஞ்சமஞ் சூர்ந்துறை வீசுகின்ற
சரற்காலம் வந்தடைந் தார்தஞ்சை வாணன் தமிழ்வெற்பரே.
(இ-ள்.) மின்னே!   போய்   நாட்டைக்   காத்து   உரல்   போன்ற   கால்களை
யுடையனவாகிய  குஞ்சரங்கள்  அஞ்சும்படிமுகில் நடந்து துளிகளை யெறியப்பட்ட
சரற்காலமென்றறிந்து தஞ்சை வாணன்  தமிழ்வெற்பர் வந்தடைந்தனர்; ஆதலால்,
தலைவர் வருங்காலம்  எப்போது  எப்போது  என்று  பலகால்  கூடல் வளைத்து
விரல் உதிரமொழுக இன்று மெலியவேண்டா என்றவாறு.

`என்றென்று` என்பது  விரைவின்கண்  வந்த அடுக்குமொழி. கூடல வளைத்தல் -
பிரிந்த கணவன்  வருவதற்கு  விரலால்  வளைத்துக்குறிபார்த்தல்.  கால - ஒழுக.
குஞ்சரம் - யானை; சாதியொருமை. உறை - துளி.
(413)    
காவல் பிரிவு முற்றிற்று.