|
|
உடைத்தாய் விளர்ப்பு என்கின்ற பேர் பொலிகின்ற சட்டை போர்த்திருந்த என்னை மாறுபாடுடைய இருபெரு வேந்தரது படையினகட்சென்றார், வருத்தஞ் செய்கின்ற முன்பனி நாளிலும் வந்து காத்தருளார் என்றவாறு.
|
மலிதல் - நிறைதல். சிந்தை - நெஞ்சு. மேனி - வடிவு. கஞ்சகம் - சட்டை. `விளர்ப்பெனும்பேர் பொலிகின்ற கஞ்சுகம் போர்த் திருந்தேனை` என்றது. முன்பனிக்குளிர்க்குக் கஞ்சுகம் போட வேண்டுதலான், வேட்கை நோய் தந்த விளர்ப்பென்னுங் கஞ்சுகத்தைப்போர்த்திருந்தேன் என்று கூறினாளென வுணர்க. புரத்தல் - காத்தல். நண்ணார் - மாறுபாடுடைய இருபெருவேந்தர். முனை - படை. நண்ணினர் - சென்றனர். |
(415) |
தோழி ஆற்றுவித்தல்: |
| சுற்றுங் குழலின் பிணிவிடுப் பான்வந்து தோன்றினர்பால் முற்றும் பொழிகின்ற முன்பனி நாள்முகி லுங்கடலும் வற்றும் பருவத்து மண்புரப் பான்தஞ்சை வாணனொன்னார்ச் செற்றும் படையின்வெம் போர்தணிப் பானன்ற சென்றவரே.
|
(இ-ள்.) சொருகுங் குழலையுடையாய், மேகமும் கடலும் வறக்குங் காலத்தும் உலகத்தைக் காப்போனாகிய தஞ்சைவாணன் ஒன்னாரைவெகுளும் படைபோல் இருபெருவேந்தர்பொரும் வெவ்விய போரைத் தணிக்கும்பொருட்டுத் தூதாக அன்று சென்றவர், பார்முழுதும் பொழிகின்ற முன்பனிக் காலத்தில் நின் வேட்கை நோயைத் தீர்க்கும் பொருட்டு வந்து தோனறினார், நீ புலம்பலொழியாய் என்றவாறு. |
சுற்றல் - சொருகுதல். குழல் : அண்மைவிளி. விடுப்பான், தணிப்பான் இரண்டும் வினையெச்சம் நாள் என்புழி. ஏழனுருபு தொக்கது. உம்மை : எதிர்மறை செற்றல் - வெகுளல். படையின் - படைபோல். |
(416) |
தூதிற் பிரிவு முற்றிற்று. |