கட
தஞ்சைவாணன் கோவை
316

 
செறிந்த  இருள்  மிகுந்து  துன்பத்தைப்  பொருந்திய    பின்பனிக்   காலத்துத்
துன்பப்படுகின்ற என்னை நினையார், யான் என்செய்கேன் என்றவாறு.

இன்னல் - துன்பம். கன்னற் கடிகை - நாழிகை. பகல் - ஞாயிறு.   `காண்பரிதாம்`
என்னும் பெயரெச்சம்.

  1`தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி
னெச்சொ லாயினு மிடைநிலை வரையார்`

    என்னுஞ் சூத்திரவிதியால்,  இடையே  பலசொல்  வரினும்,  பனி   என்னும்
பெயரைக் கொண்டு முடிந்தது.
(418)    
தோழி யாற்றுவித்தல்:
  வடுக்கண் டனையகண் மங்கைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பின்
அடுக்கங் களிர அசைகின்ற வாடை யகன்றவர்க்கு
நடுக்கஞ்செய் பின்பனி நாளின்வந் தாரமர் நண்பனுற்ற
இடுக்கண் களையவென் றேயகன் கானம் இகந்தவரே.

    (இ-ள்.) தஞ்சைவாணன்    வெற்பிடத்து    மாவடுவைக்   கண்டாற்போன்ற
கண்ணையுடைய மங்கைநல்லாய்! மலைப்பக்கமெல்லாங் களிர அசைந்து வருகின்ற
வாடைக்  காற்றுப் பிரிந்தவர்க்கு  நடுக்கஞ்  செய்யப்பட்ட  பின் பனிக்காலத்து,
போரிடத்து  நட்புக்கொண்ட  வேந்தனுற்ற  துன்பத்தை  நீக்கவென்று   அகன்ற
சுரத்தைக் கடந்தவர் வந்தார், நீ புலம்பல் ஒழிவாய் என்றவாறு.

    வடு - மாவடு.     அடுக்கம் - மலைப்பக்கம்.     வாடை - வாடைக்காற்று.
அமர் - போர். இடுக்கண் - துன்பம். கானம் - சுரம். இகந்தவர் - கடந்தவர்.
(419)    
துயைவயிற் பிரிவு முற்றிற்று.

1. தொல். சொல். விளையியல் - 40.