தஞ்சைவாணன் கோவை
318

 
     (இ-ள்.) புலவர்     தம்மிடத்து      உண்டாகிய       மிடித்துன்பத்தைத்
தீர்த்தருளப்பட்ட  வாணன்  தென்  தஞ்சையிலிருக்கும்  வஞ்சிக்    கொம்பானது
திங்களை   யேந்தியது   போன்ற   அழகார்ந்த   முகத்தையும்   இனிமையாகிய
மொழியையும்  உடையாய்!  நம்முடைய  கண்ணானது  கலுழ   அரிய   பொருள்
தேட நடந்த  அன்பர் இளவேனிற் காலம் வந்து செங்கண்ணையுடைய கருங்குயில்
ஆரவாரிப்பது கேட்கிலர், யான் என்செய்கேன் என்றவாறு.

இடும்பை - துன்பம். வஞ்சி - வஞ்சிக்கொம்பு. நிவநத்தல் ஈண்டு ஏந்தல். கவின் -
அழகு. ஆர்தல் - பொருந்துதல்.
(421)    
தலைவியைத் தோழி யாற்றுவித்தல் :
  வார்த்தன பார மடமயி லேகுயில் மாருதமாம்
தேர்த்தனி வீரன் திருநாளும் வந்தது சேர்மின்சென்றார்
தார்த்தட மேரு வெனும்புய வாணன்தஞ் சாபுரிநின்
றார்த்தது கேட்டுவந் தார்பொருள் தேட அகன்றவரே.

     (இ-ள்.) வார்கட்டிய     தனபாரத்தையுடைய     மடமயிலே   போல்வாய்
தார்பொருந்திய     பெரிய     மேருவென்னும்     புயத்தையுடைய    வாணன்
தஞ்சாபுரியினின்று    தென்றற்றேரையுடைய  ஒப்பில்லாத   வீரனென்னுங்காமன்
திருவிழா வந்தது;  பிரிந்து சென்றவர்கள் தலைவியிடத்துப் போய்ச் சேர்மினென்று
குயிலார்த்தது  கேட்டுப் பொருள் தேடப்  பிரிந்து போனவர் நம் பக்கல் வந்தனர்,
நீ புலம்பல் ஒழிவாய் என்றவாறு.

    வார் - கச்சு.    மாருதம் - தென்றல்.    வீரன் - மாரன். `குயில் ஆர்த்தது`
எனவும், `அகன்றவர் வந்தார்` எனவும் இயையும்.
(422)    
தலைவன் தலைமகளது
உருவுவெளிப்பாடு கண்டு சொல்லல்:
    தலைமகன்  தலைமகளத  உருவுவெளிப்பாடு  கண்டு   சொல்லல்   என்பது,
கல்விவயிற்பிரிவு    முதலாய   ஐந்தினுள்ளும்  தூது  முதலியவும்  நிட்டித்துழித்
தலைமகன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு சொல்லுதல்.

  மைக்குஞ் சரநிரை யாற்றஞ்சை வாணன் மருவலரைக்
கைக்குங் களங்கெழு பாசறை யூடு கயலும் வில்லும்
மொய்க்குஞ் சுடரிள வம்புலி தானு முயங்கியெல்லாத்
திக்குந் தொழுவரு மேசுரு ளோலைத் திருமுகமே.

    (இ-ள்.) தஞ்சைவாணன்  கரிய  யானைக்கூட்டத்தில் பகைவரைக் கோபிக்குங்
களம்போன்ற பாசறையுள்ளே கயல்போன்ற கண்ணும் வில்