|
|
போன்ற புருவமும் மொய்க்கும் ஒலியையுடைய இளம்பிறை போன்ற நுதலும் கூடிச் சுருண்ட ஓலையையுடைய திருமுகமானது எல்லாத் திக்கினும் யான்தொழவரும் என்றவாறு.
|
குஞ்சரம் - யானை. நிரை - கூட்டம். கெழு : உவமவுருபு. கைத்தல் - கோபித்தல். முயங்குதல் - கூடுதல். கயலும் வில்லும் புலியும் மூவேந்தர் இலச்சினையாதலான் அம்மூவரும் இலச்சினையிட்டு வரவிடுத்த சுருளோலைத் திருமுகமென்று எட்டுத் திக்குந் தொழவருமென்று சிலேடையால் ஒருபொருள் தோன்றியவாறு உணர்க. |
(423) |
பாசறைமுற்றி மீண்டு ஊர்வயின்வந்த தலைவன் பாகற்குச் சொல்லல்: |
| மால்கொண்ட வாரண வாணன்தென் மாறை வலவநண்ணார் கால்கொண்ட வாளமர் கையதல் பாசறைக் கைவயின்முட் கோல்கொண்ட வாறுநின் னேவல்கொண் டியானிக் கொடிநெடுந்தேர் மேல்கொண்ட வாறநம் மூர்வந்த வாறும வியப்பெனக்கே.
|
(இ-ள்.) மதத்தால் மயக்கங்கொண்ட யானையையுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் வலவனே, பகைவரிடங் கொண்ட வாள் பொருந்திய பாசறையைக் கையலகலப்பட்ட நீ கையிடத்தில் தாற்றுக்கோல் கொண்டவாறும், நின் ஏவலைக் கொண்டு யான் இந்தக் கொடி பொருந்திய நீண்ட தேர்மேற் கொண்டவாறும், நம்மூர் வந்தவாறும் வியப்பாய் இருந்தது என்றவாறு.
|
மால் - மயக்கம். கால் - இடம். அமர்தல் - பொருந்தல். கையகலல் - நிங்குதல். முட்கோல் - தாற்றுக்கோல். வியப்பு - அதிசயம். |
(424) |
தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங்கண்டு சொல்லல்: |
| கொத்தல ரோதியங் கொம்பரன் னாள்பொங்கு கொங்கைவிம்ம முத்தல ராக முயங்கினம் யாமுழு நீர்விழிபோல் மைத்தலர் நீல மலர்வயல்சூழ்தஞ்சை வாணன்வண்மைக் கைத்தல மான இனிப்பொழி வாழிய கார்முகிலே.
|
(இ-ள்.) கார்காலத்து முகிலே, கொத்தாயிருக்கும் மலரைத் தரித்த கூந்தலையுடைய அழகிய கொம்புபோல் வாளது மிகுந்த கொங்கை பூரிக்க முதுமாலை விரிந்த மார்பை யாம் முயங்கினம்; நிறைந்த நிரிற் கண்போலக் கருமையுடைத்தாய் அலரப்பட்ட நிலமலர் பொருந்திய வயல் சூழ்ந்த |