கட

இயற்கைப் புணர்ச்சி

35

 
  செறிவேழ வெஞ்சிலை வேள்தஞ்சை வாணன் திருந்தலர்மேல்
எறிவேலை வென்றகண் ணென்னுயிரிக் கேவி யிருண்டறல்போல்
நெறிவேய் அலங்கன் முடித்தலை சாய்த்திங்ங னிற்பதுதான்
அறிவே யறிந்த வுனக்கலர் மாளிகை ஆரணங்கே

     (இ-ள்.) அலர் மாளிகையிலிருக்கும் அரிய  தெய்வம்  போல்வாய்,  வென்றி செறிந்த   கருப்பு வெஞ்சிலையை யுடைய வேளன்ன  தஞ்சைவாணன்   பகைவர் மேலெறிந்த  வேலை  வென்ற  நின் கண்ணை என்னுயிர்  மேலே  விடுத்தலைச
செய்து,   அறல்   போல்  இருண்டு  நெறிவேய்ந்த   மாலையைச்  சூடிய முடித் தலையைச்   சாய்த்து,  இவ்வாறு,  நிற்பது   எல்லாமறிந்த   உனக்கு  அறிவோ
என்றவாறு.

     `இருண்டறல்`  என்புழியும். `அறிவே யறிந்த உனக்கு`  என்புழியும்  மொழி
மாற்றிக்கொள்க.  `வேள்தஞ்சைவாணன்`  என்புழி   அன்ன என்னும்  பெயரெச்ச
வினைக்குறிப்பாகிய   உவம  உருபு   தொக்கது.   `என்னுயிர்க்கேவி`   என்புழி,
நான்கனுருபு,   மேல்    என்னும்     ஏழனுருபாயினவாறு    கண்டுகொள்க.

1`கிளையரில் நாணற் கிழங்குமணற் கீன்ற`

என்பதுபோலக்  கொள்க. நெறி - மயிர்  இருபக்கமும்  வகிர்ந்த  நடுவொழுங்கு.
முடித்தலை:   இரு பெயரொட்டுப் பண்புத்  தொகை; ஆரணங்கு: ஆகு  பெயர்;
அன்னம் போல் வாளை அன்னம் என்றது போலக் கொள்க. (6)

முன்னிலையாக்கல்:
     முன்னிலை     யாக்கல்       என்பது,       தலைமகன் - தலைமகளை
முன்னிலையாக்கிக் கூறுதல். அஃதென்னை எனின்,

     காரியத்திற்கு  முன்நிற்பது யாதோ அது முன்னிலை என்று பெயர்  பெறும்
முன்னிலையெனினும்  முதனிலையெனினும்  காரணம்  எனினும் ஒக்கும். ஆயின்,
என்சொல்லியவாறோ  வெனின், இவள்  நிற்பது தன்  காரணமாக்கிக் கூறுதல்.

  வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன்தென் மாறைவண்டு
கொழுதிய லார்செய் குழன்மட வீர்நுங்குற் றேவல்செய்து
தொழுதிய லாயத் தொகுதியொ டாடிச் சுனைகுடையா
தெழுதிய பாவையைப் போல்நின்ற வாறென் இயம்புமினே.

     (இ-ள்.)பாண்டியருடைய புகழை வளர்க்கின்ற வாணன் தென்மாறை  நாட்டு,
வண்டு கொழுதப்பட்ட, செய்ய வேண்டும் இலக்கணமெல்லாம்


     1. அகநானூறு - 212.