கட

தஞ்சைவாணன் கோவை

37

 
நச்சினார்க்கினியர்   மெய்தொட்டுப்  பயிறல் என்பதற்கு, புலையன் தீம்பால்போல
மனங்கொள்ளவும்  கொள்ளாவுமாகி  யிருக்கின்ற  காலத்தே  தொட்டான்  என்று
உரை கூறினார். அஃதென்னை யெனின் புலையன் தொட்டான் என்பதனான் சிறிது
அருவருப்பும்,  பாலுக்குக்  குற்றமின்று  என்பதனான்  விருப்பும் என்று பொருள்
் கொள்க.   அருவருப்பும்   விருப்பும்   இவட்கு   எற்றினாலாயதோ  வெனின்,
களவொழுக்கம் என்பதனான் அருவருப்பும், கந்தர்வமணம் என்பதனான் விருப்பும்
என்று பொருள் கொள்க. இனி, எவ்வுறுப்பைத் தொட்டானெனின், தோள்
தீண்டினான் என்க. என்னை,

1`உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்`
என்பதனாற் கண்டுகொள்க.

நல்லார் விழிபோ லிருந்தும் அளியெனு நாமம்பெற்றும்
அல்லார் குழலில் அமர்ந்திருந் தாலம ராரைவெல்ல
வல்லான் வரோதயன் வாணன்தென் மாறை மதுகரங்காள்
நில்லர் திடையுமக் கோபழி சால நிலைநிற்குமே.
       (இ-ள்.) பகைவரை  வெல்ல  வல்லமை  படைத்து  வரத்தினால் உதயஞ்
செய்தவனாகிய  வாணனது  தென்மாறை நாட்டு வண்டுகாள், நல்லார்க்கு நீர் கண்
போலிருந்தும்,  அன்பு  என்கிற அளியென்னும் பெயரைப் பெற்றும், இவளுடைய
இருள்  போன்ற  குழலின்மேற்  பொருந்தியிருந்தீராயின்,  இடைநில்லாது  இறும்;
அதனால்  இவள்  இறந்துபடும்; படின் உமக்குப் பெண் கொலைப் பாவம் மிகவும்
நிலைநிற்கும்;  அவ்வண்ணம்  கொலைப்பாவம்  வாராமல் நீக்குவீராக என்றவாறு.

     நீக்குவீராக  என்பது  வருவித்து உரைக்கப்பட்டது. ஓ என்பது அசைநிலை.
அல்லார் என்புழி,  ஆர் உவமவுருபாய்  நின்றது. வரோ தயன் வடசொன் முடிபு.
வல்லான்  என்னும்  வினைக்குறிப்பு  முற்றுவினை  யெச்சமாய் நின்றது. என்னை,
திருமுருகாற்றுப் படையுள்,

2`குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்`
என்பதற்கு,  `குழலையூதிக் கோட்டைக் குறித்துப் பல்லியத்தை யொலித்து`  என
முற்றுவினை   யெச்சமாக   நச்சினார்க்கினியர்   கூறிய வுரையிற் கண்டுகொள்க.
இக்கிளவிக்கு   வண்டு   முன்னிலையாகப்   பாட   வேண்டும்   என்பது.  (8)


1. குறள். புணர்ச்சி மகிழ்தல் - 6.
2. திருமுரு. 209.