39
பொய் பாராட்டல்:

 
படர்ந்திருக்க, மாதவிக்கொடி நின்று மலர்பூத்து வண்டும் தேனும் பாட வரிக்குயில்
கூவத் தென்றல் வீசாநிற்க மணல் பரந்து பூந்தாது தவிசுபடுத்தாற்போற் பொலியும்
அவ்விடத்தைக்  காணப்பெற்று,  அவ்விடத்துத்  தலைவன்  தலைவியைத்  தழுவ
விரும்பிக் கூறுதல்.


     இவ்வாறு  விரித்துச்  சிறப்பித்துக் கூறவேண்டுவது என்னையெனின்,களவிற்
பகற்குறியிற்கூடுங்  கூட்டமெல்லாவற்றிற்கும் இதுவே குறியிடமாக நிற்றலின் எனக்
கொள்க.
படம்பட்ட வாளர வல்குலி லேதளை பட்டநெஞ்சம்
விடம்பட்ட வாள்பட்ட வேதனை தீரவிண் தோய்பொழிலுந்
தடம்பட்ட வாவியுஞ் சூழ்தஞ்சை வாணன் தமிழக்கிரிநாம்
இடம்பட்ட வார முலைத்தடந் தோய்தற் கிடமிதுவே.

     (இ-ள்.)  ஒளி   பொருந்திய   அரவினது  படம்போல்  உண்டாக்கப்பட்ட
அல்குலிடத்துக் கட்டுப்பட்ட நெஞ்சமே, விடத்திலே பதப்பட்ட வாளாலறுக்கப்பட்ட
துன்பந்தீர,   விண்ணைத்   தொட்ட  பொழிலும்,  விரிவுபட்ட  வாவியும் சூழ்ந்த
தஞ்சைவாணனது   பொதியமலையினிடத்து  நாம் மார்பெல்லாம் இடமாக்கப்பட்ட
முத்துமாலை பூண்ட முலையாகிய வாவியிற் குளித்தற்கு இதுவே இடம் என்றவாறு.

      `படம்பட்ட வாளரவு`  என்புழி  மொழி  மாற்றிக்   கொள்க.   நெஞ்சம்: 
அண்மைவிளி.  வாள்  போன்றதனை  வாள்  என்றார்,  அஃது   ஆகுபெயராற் 
கண்ணென்று  கொள்க.  தமிழ்க்கிரி  என்புழி  கண்  என்னும்  உருபு தொக்கது. 
இதுவே  என்னும்  ஏகாரம்  தேற்றம்; அத் தேற்றத்தினால்  இடம்   வேறில்லை
யென்பது உணர்த்தப்பட்டது.
(10)    
வழிபாடு மறுத்தல்:
      வழிபாடு மறுத்தல் என்பது, `இரந்து பின்னிலை நிற்றல்` முதலாகப்  `பொய்
பாராட்டல்` ஈறாகத் தலைவன் வழிபட்டதனைத் தலைவி மறுத்தல்.
      இடம்பெற்றுத்  தழால்  என்னுங்  கிளிவியில்  இடங்குறித்துத்   தலைவன்
தன்னுட்  கூறுதலும், தலைவி தன் இயல்பான் அவன் கூறியவிடத்துக் காகதாலியம்
போலச்   சென்றாள், கூறக்கேட்டு  இவன் சொற்படி சென்றளல்லள்;  அங்ஙனஞ
சென்றாளாயின்,   புணர்ச்சிக்கு   உடன்பட்டனளாம்;    ஆகவே  மறுத்தெததிர்
கோடலோடு   மாறுகொள்ளும்.   அன்றியும்,  இக்கிளிவியின் பொருள் தலைவன்
வழிபாட்டைத்   தலைவி   மறுத்தாள்  என்பதாகலின்  மறுத்தே கூற  வேண்டும்
எனப்படும். அஃதென்னை யெனின்,