|
இடையூறு கிளத்தல் என்பது, தலைவி நாணிக் கண்புதைத்தினான் எழுந்த துன்பத்தைக் கூறுதல்.
|
| சிலதயா முளரித் திருமா ளிகையிற் சிறந்ததென்றென் இதயார விந்தத் தினிதிருப் பீரிரு கோட்டொருகை மதயானை வாணன் வருந்தஞ்சை சூழ்வையை நாட்டுறைவோர் புதையார் தனமென்ப தோமதர்வேற்கண் புதைத்துவே.
|
(இ-ள்.) கேடில்லாத தாமரைத் திருமாளிகையினுஞ் சிறந்ததென்று என் இதயதாமரை வீட்டில் நன்றாக இருக்கின்றவரே, இரு கொம்பையும் ஒரு கையையுங் கொண்ட மத யானையையுடைய வாணன் வரப்பட்ட தஞ்சையைச் சூழ்ந்து வரும் வையைநாட்டின் கணுள்ளோர் தனம் படைக்கின் புதையார் என்னும் நாட்டு வழக்கமோ, தனத்தைப் புதையாது, நீர் மதர்த்த வேல்போலுங் கண்ணைப் புதைத்தது என்றவாறு.
|
இவரைத் திருமகள் எனப் பாவித்துக் கூறினமையான், தாமரை மாளிகையாயிற்று. இதயாரவிந்தம் வடசொன் முடிபு. வையை நாட்டு உறைவோர் தனத்தைப் புதையார் என்றது, தினந்தோறுந் தருமத்தின் பொருட்டும் புகழின் பொருட்டும் வழங்குவர் என்று கூறியவாறு உணர்க. |
(12) |
நீடுநினைந் திரங்கல்: |
நீடுநினைந் திரங்கல் என்பது, புணர்ச்சி யெய்தாமையான் இவளுள்ளம் எஞ்ஞான்று இயையுங்கொல்லோ எனக் காலநெடிதாகத்தலைவியை நோக்கி நினைந்து இரங்கிக் கூறல்.
|
| தமிழ்தங் கியதஞ்சை காவலன் வாணன்தடஞ்சிலம்பில் குமிழ்தங் கியமதிக் கொம்பரன் னீர்குளிர் வெண்ணிலவூ டுமிழ்தண் தரளப் பவளச்செங் கேழ்வள்ளத் துள்ளிருக்கும் அமிழ்தந் தருவதென் றோபெரு வேட்கையென் னாருயிர்க்கே. |
(இ-ள்.) தமிழ் நிலையாய்த் தங்கிய தஞ்சைக்கு வேந்தாகிய வாணன் பெரிய மலையிடத்தில் குமிழ்தங்கிய மதியையுடைய கொம்புபோல்வீர்? பெருவேட்கை கொண்ட என்னாருயிர்க்குக் குளிர்ந்த வெள்ளிய நிலவினை உள்ளே காலப்பட்ட தண்ணிய தரளம் பொருந்திய பவளத்தினாற் செய்த சிவந்த நிறம் பொருந்திய கிண்ணத்தின் உள்ளிருக்கும் அமிழ்த நீர் தருவது எஞ்ஞான்றோ, என்று நீடுநினைந்திரங்கிக் கூறினான் என்றவாறு.
|
`குமிழ் தங்கிய மதக் கொம்பரனீர்` என்றது, நாசி பொருந்திய முகத்தையுடைய கொம்புபோல்வீர் என்றும், `குளிர்வெண்ணிலவூ |