தஞ்சைவாணன் கோவை
42 

 
`குளிர்வெண்ணிலவூடு   தமிழ்தண்    தரளம்`   என்றது   முறுவல்  என்றும்,
`பவளச்  செங்கேழ்  வள்ளம்`   என்றது   வாயென்றும்,  பொருளைக்  கூறாது உவமத்தினாற் கூறினார், ஆகுபெயரென்னும் இலக்கணங் கொண்டென்று உணர்க.

(13)    
மறுத்தெதிர்க்கோடல்:
      மறுத்தெதிர்கோடல் என்பது, முன்வழிபாடு மறுத்ததனை மறுத்துத்
தலைவன் கூறிய சொல்லை யேற்றுக் கோடல்.

(15)    
      எதிர்கோடல்  ஏற்றுக் கோடலாமோ  எனின், போரெதிர்ந்தான்   என்றால்
போரேற்றான்  என்று   பொருள்  கூறுதல்  போலும்  என்று  உணர்க. வழிபாடு
மறுத்ததனை மறுத்தலென்றது, வழிபாடு  மறுத்தல் இக்கிளவியைத் தொடராதன்றே, இடையூறு  கிளத்தல், நீடுநினைந்திரங்கல் என்னும் இரண்டு கிளவியும் இடையீட்டு
நிற்க, வழிபாடு மறுத்ததனை, மறுத்தெதிர் கோடல் எங்ஙனம்  இயையுமோவெனின், இயையும், என்னையெனின், வழிபாடு மறுத்தல் தலைவி கூற்றாகலின், அக்கூற்றுக்கு மறுத்தெதிர்கோடலும்  தலைவி  கூற்றாகலின்,  அடுத்த  கூற்றாய்  இயைந்தவாறு
காண்க.  இவ்வியைபுடைமை  1`மறைந்தவற் காண்டல்`  என்னுந்   தொல்காப்பியச்
சூத்திரத்தில், கிளவி,  கோக்குமுறைமையில்  தலைவி  கூற்றெல்லாம் ஒருங்குபடத்
தொகுத்துக்   கூறுமிடத்து   வழிபாடு  மறுத்தல்,  மறுத்தெதிர்  கோடல்   எனத்
தொடர்ச்சியாய்க் கூறியவாறு உணர்க.

கறையார் இலங்கிலை வேலன்பர் காமக் 2கடற்கெதிர்ந்த
நிறையாம் வரம்பினி நிற்பதன் றாளிறைநீருலகை
மறையாமல் வன்கலி மாற்றிய வாணன்தென் மாறையினாம்
பொறையர் தவஞ்செய்தி லேநெஞ்ச மேயென் புகல்வதுவே.

      (இ-ள்.)  நெஞ்சமே,  குருதியார்ந்திலங்கிய  இலைபோலும் வேலையுடைய
அன்பரது  காமக்கடல் கரைபுரண்டுவர, அக்கடற்கெதிராய நம்முடைய நிறையாகிய
வரம்பு,  தடுக்கும்  எனக்  குறுக்கிடின்  நிற்பதன்று  நிறைந்த நீர்சூழ்ந்த  வுலகை
மறைக்கவந்த  வன்கலியை  மறையாமல் மாற்றியிடுந் தன்மையையுடைய வாணனது
தென்மாறை  நாட்டுக்கண் வேட்கையைப் பொறுக்கத்தக்க நிறைதவம் செய்திலேம்,
நாமினிப் புகல்வது என் என்றவாறு,

      கறை - குருதி. ஆல் : அசை.  கடல்  எழுந்து  வரின்  குறுக்கே  தடுக்க
நினைப்பார் உலகத்தில்லையென்பது குறிப்பாற்



1. தொல். பொருள் களவியல் - 20.
(வே - பா.) 2. கடற்கெதிர் நம்.