|
| வானக் கதிரவன் மண்ணக மாதை மணந்ததன்றோ நானக் குழலியை நானின்று பெற்றது நாவலர்க்குத் தானக் களிறு தரும்புயல் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ் கானக் கடிவரை வாய்விரை நாண்மலர்க் காவகத்தே.
|
(இ-ள்.) நாவலர்க்கு மதம் பொழியும் யானையைக் கொடுக்கும் புயல் போன்ற வாணனது தமிழ்த் தஞ்சை சூழ்ந்த காடு மிகுந்த வரையிடத்து, மண் நாறும் நாட்கொண்டமலர் செறிந்த சோலையிடத்து, மான்மதமார்ந்த குழலினை யுடையாளை நான் இன்ற முயங்கப்பெற்ற அருமை, வானத்தை யிடமாக வுடைய ஆதித்தன் மண்ணிடத்து மாதை வந்து கூடியதாம் என்றவாறு. |
வானம் - ஆகாயம். நானம் - மான்மதம். தானம் - மதம். புயல் வாணன்: உவமைத் தொகை. கானம் - காடு. கடி - மிகுதி. நாண்மலர் - முறுக்கவிழ் மலர். `நானின்று பெற்றது` என இறந்தகாலத்தாற் கூறியது, கூடும் விரைவு பற்றியெனக் கொள்க. என்னை,
|
| 1`வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மார் புலவர்`
|
என்னுஞ் சூத்திர விதியாற் கண்டுகொள்க. |
(17) |
புணர்ச்சியின் மகிழ்தல்: |
புணர்ச்சியின் மகிழ்தல் என்பது, தலைவன் புணர்ச்சியான் மகிழ்தல்.
|
| மலைநாடு கொண்ட வழுதிகண் போல்பவன் வாணனெண்ணெண் கலைநாடு தஞ்சையர் காவலன் மால்வரைக் கன்னிபொன்னாண் முலைநா முயன்றுமுயங்கின மால்முயன் றாலினியைந் தலைநாக நன்மணி யும்பெற லாமித் தரணியிலே.
|
(இ-ள்.) நெஞ்சமே, சேரமானாடாகிய மலைநாட்டை வெற்றியாற் கவர்ந்த வழுதிக்குக் கண்போன்றவன், அறுபத்து நான்கு கலைகளும் இருப்பதற்கு நாடிய தஞ்சை நகரிலுள்ளார்க்கு அரசனாகிய வாணனது பெரிய மலையிடத்து, பெறுதற் கரிதாகிய இக் கன்னியினுடைய பொன்னாணணிந்த முலையினிடத்து நாம் முயற்சியான் முயங்கினம்; ஆதலால், இன்று இத்தரணியிற் கிடைப்பதற்கு அரிதாகிய ஐந்தலை நாகத்தினது
|
|
1. தொல். சொல். வினை - 44. |