|
|
(இ-ள்.) பாரிடத்து நிலைபெற்ற புகழையுடைய வாணனது தென்மாறை வெற்பில் வரும் பேரருவி தண்ணமையாக இளமயில ் ஆடும் இப்பெரிய சோலையிடத்து, இன்று மாந்தளிர் போல் ஒளிவிடப்பட்ட அழகை விளர்த்துக் காட்டுவது என்னே! விதியானது கூட்டுவிக்க நம்முட் பிணித்த காதலைப் பிரிப்பவர் யார்? ஆதலால், நீ ஐயுறேல் என்றவாறு.
|
`அருவி யின்னியமாக இளமயில் ஆடும்` என்பதனான். வெற்பு வருவிக்கப்பட்டது. `பார் மன்னிய` என இயையும், மாமை - அழகு; நிறமுமாம்.
|
| 1`தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு`
|
என்னும் குறளில், `அம் மா அரிவை` என்பதற்கு, `அழகிய மாமை நிறத்தையுடைய அரிவை` என்று பரிமேலழகர் எழுதியவுரையாற் கண்டுகொள்க.
|
விளர்த்தல் - மனக் கவற்சியால் வெளுத்தல். விதி - ஊழ்வினை. பின்னிய - பிணித்த. இனி - இன்று. இன்னியம் ஈண்டுத் தண்ணுமை. இருமை - பெருமை. பொழிற்கே என்புழி வேற்றுமை மயக்கம். ஏகாரம் இரண்டும ் ஈற்றசை. தலைவி : முன்னிலையெச்சம்.
|
(22) |
பிரியேனென்றல்: |
பிரியேனென்றல் என்றது, நீர்க்கரைப் பசுங்கொடி வேனில் வெப்பத்தால் நிறம் வேறுபடல்போல, புணர்ச்சியின்பத்தாற் பெற்ற அழகு, எம்பெருமான் பிரிவன் என்னுங் கவற்சியால் விளர்த்த வெளுப்பு நீங்காமை கண்ட தலைமகன் நின்னிற் பிரியேன் என்று வற்புறுத்திக் கூறல்.
|
| வண்கொடி யேய்மதில் மாறை வரோதயன் வாணனொன்னார் எண்கொடி யெனெய்த இவ்வண்ண நீயிரங் கேலிரங்கேல் நுண்கொடி யேரிடை வண்டிமிர் பூங்கழல் நூபுரத்தாள் பெண்கொடி யேபிரி யேன்தரியேனிற் பிரியினுமே.
|
(இ-ள்.) கொடுக்குங் கொடையாற் கட்டிய கொடி பொருந்திய மதில் சூழ்ந்த மாறைநாட்டில், வரத்தினாலுதயஞ் செய்த வாணனுக்குப் பகைவரா யுள்ளார் எய்தும் எண்ணத்தைக் கொடியேனாகிய யான் எய்துமாறு, விளர்ப்பு வண்ணமாக நீ யிரங்கற்க இரங்கற்க; நுண்ணிய கொடிபோல் அழகையுடைய இடையையும் வண்டுக ளிமிரும் பூவணிந்த குழலையும் பரிபுரமணிந்த தாளையும் உடைய பெண்கொடியே, நின்னிற் பிரியேன்; அன்றிப்
|
|
1. குறள். புணர்ச்சி மகிழ்தல் - 7. |
|
|
|