|
|
வருவேன்` எனக் கூறின், தலைவன் பொய்யனெனத் தோன்றித் தலைவியிறந்துபடும். அதனால் பிரியே னென்றலுடனே பிரிவையும் அறிவுறுத்திக் கூறினன் என்பது. இக் கிளவிக்குப் `பிரியேன் பிரியினுந் தரியேன்` என்று கூறுவது இலக்கணம். என்னை,
|
| 1`மின்னிற் போலிந்தசெவ் வேல்வலத் தான்விழி ஞத்தெதிர்ந்த மன்னர்க்கு வானங் கொடுத்தசெங் கோள்மன்னன் வஞ்சியன்னாய் நின்னிற் பிரியேன் பிரியனு மாற்றே னெடும்பணைத்தோள் பொன்னிற் பசந்தொளி 2வாடிட வென்னீ புலம்புவதே` |
| 3`பொன்னாற் புனைகழற் பூழியன் பூலந்தைப் பூவழிய மின்னா ரயில்கொண்ட வேந்தன் விசாரிதன் வெண்டிரைமேல் முன்னாண் முதலறி யாவண்ண நின்ற பிரான்முசிறி யன்னாய் பிரியேன் பிரியனு மாற்றே னழுங்கற்கவே`
|
எனவும் கூறிய சான்றோர் செய்யுட்களான் உணர்க.
|
இக்கிளவியில் அணங்கொடு சூளுற்றுக் கூறினான் என்பது. சூளுறல் செய்யுளிற் கூறியதில்லையால் எனின், வரைவியலில் `துதித்தே னணங்கொடு சூளுமுற்றேன்` என்பதனானும், 4"தெய்வம் பொறைகொளச்செல்குவம்" என்பதனானும் உணர்க. இஃது இக்கிளவிக்கணல்லது கூறுதற்கு வேறொரிடமும் இன்மையான் இங்ஙனம் கூறியதென்று உணர்க.
|
| 5"இலங்கு மருவித் திலங்கு மருவித்தே வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை"
|
என்னுங் குறிஞ்சிக்கலியுள், சூளுறவு கூறியவாறு உணர்க.
|
(23) |
|
பிரிந்து வருகென்றல் என்பது வெளிப்படை. பிரிந்துவருகேன் என்னுஞ் சொல் விகாரப்பட்டதெனக் கொள்க.
|
| சென்றே பகைவென்ற திண்படை வாணன் செழுந்தஞ்சைசூழ் நன்றே தருவையை நாடனை யாய்நம தாருயிர்போல் ஒன்றே யெனதுரை யூங்குயர் சோலையி னூடொளிந்து நின்றே வருவலிங் கேவிளை யாடுக நீசிறிதே.
|
|
1. இறைய. அகப்பொருள் - 2ஆம் சூ. உரை மேற்கோள்கள். (பாடம்) 2. வாடவென்னாங்கொல் புலம்புவதே. 3. தஞ்சைவா. 290. 4. அகப். விளக்கம், வரைவியல் - 6. 5. கலித். குறிஞ்சி - 5. |
|