|
அஃதாவது,
|
| 1`தலைவன் மாற்றந் தலைவி தேற்றம் தெளிவா மென்பர் தெளிந்திசி னோரே` |
என்னுஞ் சூத்திர விதியால் தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிந்து ஆற்றுவது. |
| எத்துந் தமதுரை தேறிநின் றேனையிங் கேதனியே வைத்தங் ககன்று மறத்துறை யார்வறி யோர்கவர முத்துந் துகிரு மிரங்குந் தரங்க முகந்தெறிந்து தத்துங் கரைவையை சூழ்தஞ்சை வாணன் தமிழ்வெற்பரே.
|
என்னுஞ் சூத்திரவிதியால், இப் பத்து அவத்தைக் கண்ணும் மடியின்றி முயன்று செய்தல் எனக் கொள்க.
|
(இ-ள்.) எத்திறத்துந் தரியேம் நிற்பிரியினுமென்று கூறிய தமதுரையை மெய்யாகத் தேறிநின்றேனை இவ்விடத்துத் தனியாக வைத்து நீங்கி அவ்விடத்து நம்மை மறந்து தரித்து இரார், வறியோர் கவர முத்தையும் பவளத்தையும் ஒலிக்குந் திரையாகிய கையினான் மொண்டு வீசித் தத்துங் கரைபொருந்திய வையை சூழ்ந்த தமிழ் வெற்பர் என்றவாறு.
|
|
வறியோர் கவர முத்தும் துகிரும் திரைக்கையாலே முகந்து எறிகின்ற அருளுடைய வையைநதி சூழ்ந்த நாட்டுவெற்பராதலான்; இவரும் அருளுடையராய் நம்மைத் தனியே இங்கு வைத்து அங்ககன்று உறையார் என்பது தோன்றி நின்றது.
|
எத்தும் - எத்திறத்தும். `அகன்று அங்கு` என்று இயையும். துகிர் - பவளம். இரங்குதல் - ஒலித்தல். தரங்கம் - அலை. தத்தல் - தாவல். |
(26) |
தெளிவு முற்றிற்று. |
|
1. அகப். விளக்கம், களவியல் - 14. |