|
|
அஃதாவது முன்றா நாள் பாங்கனாற் கூடுங் கூட்டம்.
|
| 1`சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென் றாங்கெழு வகைத்தே பாங்கற்கூட்டம்.
|
என்னுஞ் சூத்திர விதியாற் பாங்கற் கூட்டம் எழுவகையினை யுடைத்து என்பது. |
தலைவன் பாங்கனைச் சார்தல்: |
தலைவன் பாங்கனைச் சார்தல் என்பது, தலைவன் இவ் வேட்கைநோய் பாங்கனாலன்றித் தீராதென்றெண்ணிப் பாங்கனைச் சார்தல்.
|
| புனையாழி அங்கைப் புயல்வளர் பாற்கடற் பூங்கொடிவாழ் மனையா கியதஞ்சை வாணனொன் னாரென மற்றிங்ஙனே இனையா தெழுமதி நன்னெஞ்ச மேநமக் கின்னுயிரே அனையான் அருட்புன லராலனங் கானலம் ஆற்றுதற்கே.
|
(இ-ள்.) நல்ல நெஞ்சமே, நமக்கினிய உயிர்போன்ற உயிர்ப்பாங்கன் அருட்புனலால் காமாக்கினியை அவித்தற்கு, சக்கரத்தை யணியும் அழகிய கையினையுடைய புயல்போன்ற திருமால் கண்வளரும் பாற்கடலைப் பிறந்தகமாகவுடைய பூங்கொடி போன்ற திருமகட்கு வாழ்க்கை மனையாகிய தஞ்சைமா நகரையுடைய வாணனுக்கு ஒன்னார் போல இவ்விடத்தில் வருந்தாது, அவன் பக்கற் சேர எழுவாயாக என்றவாறு.
|
`ஆழிபுனை` என மாறுக. புயல் - மேகம். `ஆழியங்கைப்புயல்` என்பதும், `பாற்கடற் பூங்கொடி` என்பதும் சிறப்புருவகம். `பூங்கொடி வாழ்மனையாகிய தஞ்சை` எனவே, திருமகள் பிரியாத தஞ்சையென்றாயிற்று. ஒன்னார் - பகைவர். மற்று : அசை. இனைதல் - வருந்துதல். மதி: முன்னிலையசை. அருட்புனல் - அருள்நீர். அனங்கானலம் - காமாக்கினி : வடசொல் முடிபு. |
(39) |
| பாங்கன் தலைவனை உற்றது வினாதல்: |
பாங்கன் தலைவனை உற்றது வினாதல் என்பது, பாங்கன் தலைவனது உள்ளமும் தோளும் வாடிய வேறுபாட்டைக் கண்டு நினக்கு இவ்வேறுபாடுற்ற காரணம் என்னவென்று வினாதல்.
|
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 20. |