தஞ்சைவாணன் கோவை
68

 
 வலம்புரி போற்கொடை வாணன்தென் மாறை மழைவளர்பூஞ்
சிலம்புறை சூர்வந்து தீண்டின போலொளி தேம்பியிவ்வா
றுலம்புனை தோளுநின் உள்ளமும் வாடி யுருகிநின்று
புலம்புவ தென்னைகொல் லோசொல்ல வேண்டும் புரவலனே.

      (இ-ள்.)   புரவலனே!   சங்கநிதிபோற்  கொடுக்கும்  கொடையையுடைய
வாணனது     தென்மாறை    நாட்டின்கண்   உள்ள   முகில்     கண்வளரும்
பொலிவினையுடைய   சிலம்பில்  உறையுஞ்  சூர் என்னுந் தெய்வப் பெண் வந்து
தீண்டியது   போல,  நின்    திருமேனி   ஒளிதேய்ந்து,    திரண்ட    கல்லுப்
புனைந்தாலொக்கும்   நின்னுடைய   தோளும்   உள்ளமும்  வாடி உருகி நின்று
இவ்வாறு புலம்புவது என்னோ சொல்ல வேண்டும் என்றவாறு.

      வலம்புரி:   ஆகுபெயர். மழை - முகில். வளர்தல் - கண் வளர்தல்.  பூ -
பொலிவு. சிலம்பு - மலை. சூர் - ஒரு தெய்வப் பெண். தேம்பல் - தேய்தல்.

 1`தேம்பலஞ் சிற்றிடை ஈங்கிவ டீங்கனிவாய்`

     என்றார் பிறரும். உலம் - திரண்ட கல். கொல்,   ஓ  என்பன அசைநிலை.
(40)    
தலைவன் உற்றதுரைத்தல்:
     தலைவன்   உற்றது  உரைத்தல் என்பது,  இவ்வாறு வினாவிய பாங்கற்குத்
தலைவன் தனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறல்.

 மலைமுழு துங்கொற்றம் வைக்கின்ற வாணன்தென் மாறை நண்பா
சிலைமுழு துஞ்சுற்று முற்றுமெய் யாநிற்பச் செந்நிறத்தே
கொலைமுழு துங்கற்ற கூரிய வாளி குளிப்பஇன்றென்
கலைமுழு தும்பட்ட தாலொரு மான்முடிக கண்ணியிலே.

      (இ-ள்.)  எண்டிசையின்  மலைமுற்றும்  வெற்றிக்  கொடியை  வைக்கின்ற
வாணன்  தென்மாறை  நாட்டிலிருக்கின்ற  பாங்கனே!  புருவமாகிய சிலைமுழுதும்
கற்றாகிய  திசைமுற்றும் எய்யாநிற்ப, கொலைத்தொழின் முற்றுங் கற்ற கண்ணாகிய
கூரிய   வாளிகள்  எனது  செவ்விதாகிய  நெஞ்சிடத்திலே   மூழ்க.  அப்போது
என்னெஞ்சிலிரு்க்கின்ற     கலையறிவு    முற்றும்    ஒரு    பெண்    வைத்த
தலைக்கண்ணியிற் பட்டது என்றவாறு.

      `மலை முழுதுங் கொற்றம்`   எனவே  எண்டிசையும்  அவாய்  நிலையான்
வந்தது. கொற்றம்: ஆகுபெயர். சிலை : ஆகுபெயர். உலகிற் சிலை


1. திருக்கோவையார் - 11.