பங்காற் கூட்டம்
69

 
      நடுநிலையி  லெய்யும்;  இச்சிலை  அவ்வாறன்றிச்  சிலை முற்று   மெய்யா
நின்ற தென்று   கருவி   கருத்தாவாகக்  கூறியது.  விற்றோன்றுந் திசையிலன்றித்
திசையெட்டினும்    எய்கின்றமையான்    சுற்றாகிய    திசைமுற்றும்     என்றது.
எண்திசையினும்    இருந்து   வரினுந்  தைப்பது  நெஞ்சிடத்தேயெனக்  கொள்க.

      செந்நிறம் - மார்பு.   கொலை  முற்றும் - கொலைத்   தொழில்  முற்றும்.
வாளி:   ஆகுபெயர்.  குளிப்ப - மூழ்க.   கலை : ஆகுபெயர்.  ஒரு   மானுக்கு
முடிபோட்ட    கண்ணியிலே   கலையெல்லாம்   பட்டதென   ஒரு    பொருள்
தோன்றியவாறு     காண்க.  ஆல் : அசை.    கண்ணி - விலங்குகள்   புட்கள்
அகப்படுத்துங்    கருவிக்கும்,   மாதர்   குழலிற்    சூடுங்   குறுங்கோதைக்கும்
பொதுவாகலான். இவ்விரண்டுவகைப் பொருளும் தோன்ற நின்றது.

(41)    
கற்றறிபாங்கன் கழறல்:
      கற்றறிபாங்கன்   கழறல்   என்பது,  வேதாகம புராணம் யாவுங் கற்றறிந்த
பார்ப்பனப்   பாங்கன் இடித்துக்கூறல். இடித்துக்கூறல் - உறதிச்சொல்  லுரைத்தல்.

 தருகற் பகமன்ன சந்திர வாணன் தடஞ்சிலம்பில்
முரகக் கடவு ளனையவெற் பாமுகி லும்பிறையுஞ்
செருகக் கிளர்வரை வந்தவொர் பேதைக்குன் சிந்தையெல்லாம்
உருகக் கலங்கினை நீதகு மோமற் றுனக்கிதுவே.

     (இ-ள்.) இரவலர்  யார்வந்து  கேட்பினும் கேட்பவை யெல்லாங் கொடுக்குங்
கற்பகத்  தருவையொத்த சந்திரற்கு  மகனாகிய வாணனது தடஞ் சிலம்பிலிருக்கும்
முருகக்   கடவுளை  யொக்கும்   வெற்பனே! நீ முகிலும்  பிறையுஞ் செருகும்படி
யெழுந்த   வரையிடத்தில்   வந்த   ஓர் பெண்ணுக்கு   நின் சிந்தை  யெல்லாம்
உருகக் கலங்கினை, உக்கிது தகாது என்றவாறு.

     சந்திரன் - வாணனுக்குத்  தந்தை. தடஞ்சிலம்பு - பெரியமலை. செருகல் -
செருகுதல்.

 1`துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின்`

      `மலை முழுதுங் கொற்றம்`   எனவே  எண்டிசையும் அவாய்   நிலையான்
வந்தது. கொற்றம்: ஆகுபெயர். சிலை : ஆகுபெயர். உலகிற் சிலை


1. திருமுரு. 26, 27, 28.