தஞ்சைவாணன் கோவை
72

 
மனத்தின்கண்     பிறரறியாமை    அடக்கத்தக்க    காரியத்தை    யடக்குதல்.

1`நிறை யெனப்படுவது மறைபிற ரறியாமை`

என்றார் பிறரும்.நீயும் என்னும் உம்மை சிறப்பும்மை. பாங்கன்: முன்னிலையெச்சம்.
(45)    
பாங்கன் தன்மனத் தழுங்கல்:
      பாங்கன் தன்  மனத்தழுங்கல் என்பது, அதுகேட்ட பாங்கன் எம்பெருமான்
ஆற்றானாய்  இவ்வாறு  கூறினால் யான் அதற்குத் தான் என் சொல்வேன் என்று
தன்னுள்ளே யிரங்குதல்.

சீதன வாரங் கமழ்தஞ்சை வாணன்தென் மாறையன்னாள்
காதன வாவெங் கடுவள வாவொளிர் காவியந்தண்
போதன வாவிழி யென்னுமென் னாசை புறத்தனவா
சூதள வாமுலை யென்னுமென் நாம்இனிச் சொல்லுவதே.

      (இ-ள்.)   எம்பெருமான்,  குளிர்ச்சி  பொருந்திய  சந்தனங்   கமழப்பட்ட
தஞ்சைவாணன்   தென்மாறை   நாடு   போல்வாளது  கண்களைக்  காதினாலும்
அளவிட்டறியப்    படா,    வெவ்விய    விடத்தினாலும்   அளவிட்டறியப்பட்ட,
விளங்கப்பட்ட   அழகிய   குளிர்ந்த   நீலப்போதினாலும்   அளவிட்டறியப்படா
என்று   சொல்லும்;   முலையை   மலைபோல்   வளர்ந்த  என்னாசையிடத்தும்
அளவிட்டறியப்படா,   வல்லினாலும்   அளவிட்டறியப்படா   என்று    சொல்லு;
ஆதலால், நெஞ்சமே, நாம் இன்று சொல்லுவது என் என்றவாறு.

      ஆரம் - மைந்தரும்   மாதரும்  மார்பினும்  முலையினும் பூசுஞ் சந்தனம்.
கடு - விடம்.   காவி - நீலம். `அந்தண் காவி`   என  மாறுக.    புறம் - இடம்.
சூது - வல்.   இனி - இன்று.   அளத்தல் - அறிதல்;   அளவா - அறியப்படா.

      காதைக்   கடந்து   போதலான், `காதளவா`   என்றும், கடு  உண்டாரைக்
கொல்லும்,  அவ்வாறன்றிக்   கண்டாரைக்  கொல்லுதலான்,  `கடுவளவா` என்றும்,
காவிப்   பூவிற்குப்  பார்த்தறியுங் குணம் இன்மையின், `காவி யந்தண் போதளவா`
என்றுங் கூறியது.

  2`காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கு
மாணிழை கண்ணொவ்வே மென்று`


1. கலித். நெய்தல் - 16.
2. குறள். நலம்புனைந்துரைத்தல் - 4.