|
|
என்னுங் குறளினாலுங் காவிக்குக் கண்டறியுங் குணமின்மை உணர்க. |
ஆசையினும் முலை பெரிதாகலான், `ஆசைப்புறத்தளவா` என்றும், வட்டங் கொண்டு கவிந்து வண்ணம் பொதிந்திருத்தலான், `சூதளவா` என்றுங் கூறியது. `என்னும்` என்பது இரண்டும் இறுதிவிளக்கு. நெஞ்சம்: முன்னிலையெச்சம். |
(46) |
பாங்கன் தலைவனோ டழுங்கல்: |
| என்மே லறைவது யானிங்கு நின்செவிக் கென்சொலெல்லாம் வன்மே லடர்கொங்கை காரண மாத்தஞ்சை வாணன்வெற்பா கன்மே லறைகின்ற மென்முளை போலுங் கடல்வெதும்பில் தன்மேல் விளாவவுண் டோதரை மேலொரு தண்புனலே. |
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பனே, பேரின்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இத்தன்மையனாதல் தகாது என்று, சூதின்மேற் பகை நெருங்குங் கொங்கையினை யுடையாள் காரணமாக, இங்குக் கூறும் என் சொல்லெல்லாம் நின் காதுக்குக் கல்லின்மேல் அறைகின்ற மெல்லிய மூங்கிலின் முளைபோலுமாயின; யான் மேற்சொல்லுமாறு யாது? கடல் வெப்பமுறின் அவ்வெப்பம் மாற அக்கடன்மேல் விளாவுதற்குப் பாரிடத்து ஒரு தண்ணீருண்டோ என்றவாறு. |
அறைதல் - சொல்லுதல். `யானென் மேலறைவது` என மாறுக. வல் - சூது. அடர்தல் - நெருங்குதல். கொங்கை: ஆகுபெயர். அறைதல் - அடித்தல். முளை - மூங்கில். வெதும்பல் - வெப்பமுறல். தன், அடிச்சந்த நோக்கிவந்தது. தரை - பார். புனல் - நீர். |
(47) |
எவ்விடத் தெவ்வியற் றென்றல்: |
எவ்விடத் தெவ்வியற்றென்றல் என்பது, எம்பெருமான் இவ்வாறு கூறியும் ஆற்றானாயினன்,அதனால், தலைவியைக் கூடாதொழியின் இறந்துபடுமென்று தேறி, தலைவனை நோக்கி நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எவ்வியலையுடைய தென்று வினாவுதல். |
| முகத்திற் பகழி யிரண்டுடை யார்க்கிட மூரிமுந்நீர் அகத்திற் பிறந்த அரவிந்த மோவடை யார்தமக்கு மகத்திற் சனியன்ன சந்திர வாணன்தென் மாறைவெற்போ நுகத்திற் பகலனை யாய்தன்மை யேது நுவலெனக்கே. |