தஞ்சைவாணன் கோவை
76

 
`மூங்கிற்புனம்` என்று அதிகாரப்பட்டவாறு உணர்க.அன்றியும் வரைவு கடாவுதலில்
1`இரவு வருவானைப் பகல் வருகென்றல்` என்னுங் கிளவிச் செய்யுளில்,`கழைவிளை
யாடுங் கடிபுனம்  காத்தும்`  என்று   பாங்கி  கூறியவதனானும்,    இச்செய்யுளில்
புனங்கூறுமிடமெல்லாம்   மூங்கிலடையாளமன்றி வேறோர் அடையாளங்  கூறுவது
இன்றென உணர்க.

தார் - மாலை.   மலராற்    கட்டுதல்      மாலையாகலான்    மலர்    கூறாது
தழை  யிடையிடையே  கட்டுதலின்  தழை   கூறினார்.   அண்ணல் - இறைவன்.
தணிதல் - ஒழிதல். தகவின்மை - வருத்தம். முன்வளர்  இரண்டுங்  கண்வளர்தல்.
பின் வளர்  இரண்டும்  நீடல்  `தழைவளர் சார லிக்கணம்போய்`  என   மாறுக.
`மீண்டு` என்பது அவாய்நிலையான் வந்தது.
(50)    
குறிவயிற் சேறல்:
குறிவயிற்  சேறல் என்பது,  தலைவன் கூறிய  குறியிடத்துத் தலைவியைக் காணப்
பாங்கன் போதல்.


 1பாரித்த திண்மையெம் மண்ணலுண் ணீரைப் பருகிநின்று
பூரித்த செவ்விள நீர்களுந் தாங்கியப் பூங்கொடிதான்
வாரித்த லம்புகழ் வாணன்தென் மாறை வரைப்புனஞ்சூழ்
வேரித்த டம்பொழில் வாய்விளை யாடுங்கொல் மேவிநின்றே.

(இ-ள்.)  நெஞ்சமே!  தலைவன்  கூறிய  அப்பூங்கொடி  தான்,  கடல்   சூழ்ந்த
நிலவுலகம்   புகழும்  வாணனது  தென்மாறைநாட்டு  மூங்கில்  வேலியையுடைய
தினைப்புனஞ்   சூழ்ந்த   மணம் பொருந்திய பெரிய சோலையிடத்துப் பொருந்தி
நின்று, வீரமில்லாதார்க்கும் வீரத்தைப் பிறப்பித்த எம் அண்ணலது  உள்ளத்துள்ள
கலையறிவாகிய   நீரைப்  பருகி,  நிலைகொண்டு  விம்மிய செவ்விளநீர் போன்ற
முலைகளையுந்   தாங்கி,   விளையாடுமோ   என எண்ணிக்கொண்டு  சென்றான்
என்றவாறு.

பாரித்தல் - பிறப்பித்தல்.திண்மை - வீரம். உண்ணீர் - உள்ளத்துள்ள  கலையறிவு.
பூரித்தல் - விம்முதல் - உம்மை:   அசை. வாரி - கடல்.     தலம் - விலவுலகம்.
வரை - மூங்கில்.      வேரி - மணம்.      தடம்பொழில் - பெரிய    சோலை.
கொல் - ஐயம்.    நெஞ்சம்:    முன்னிலையெச்சம்.    `வரைப்புனம்`   என்பது
வரைக்கட்புனம்   என  அமையாதோவெனின், இவ்விடத்து   இவ்வியற்றென்னுஞ்
செய்யுளில் `மணிவரை சூழ்புனம்`   எனவும்,   பாங்கன்  இறைவனைத்  தேற்றுஞ்
செய்யுளில் `கழைவளர்சாரல்` எனவும்,


1. த - கோவை. செய்யுள், 238.