|
|
இச்செய்யுளில் `வரைப்புனம்` எனவும் மூங்கிலே யதிகாரப்பட்டு வருதலின் மலையாகாதென்க. |
(51) |
இறைவியைக் காண்டல்: |
| காணேய் அளகம் கரும்புய லேயியல் கார்மயிலே மானே விழிமுக மாமதி யேதஞ்சை வாணன் வெற்பில் தேனேய் தொடையலச் சேயனை யான்சொன்ன சேயிழையாள் தானே இவளிது வேஇட மாகிய தண்புனமே.
|
(இ-ள்.) நெஞ்சமே! தஞ்சைவாணன் வெற்பிடத்திருக்கும் முரகக்கடவுளனைய வண்டு பொருந்திய மாலையையுடைய எம் இறைவன் சொன்ன இடமாகிய தன்புனம் இதுவே; கருமையாகிய புயலே மணம் பொருந்திய அளகபாரமாயிருக்கின்றது; கார்காலத்து மயிலே இயலாயிருக்கின்றது; மானே விழியாயிருக்கின்றது; நிறைமதியே முகமாயிருக்கின்றது; ஆதலால், அச் சேயிழையாள் தான் இவளே என்றவாறு. |
கான் - மணம். ஏய்தல் - பொருந்துதல். இயல் - சாயல். கார் - கார்காலம். விழி - கண். மாமதி - நிறைமதி. தேன் - வண்டு. தொடையல் - மாலை. சேய்: முருகக்கடவுள். |
`கரும்புயலே கான் ஏயளகம்` எனவும், `கார்மயிலேயியல்` எனவும், `மதியே முகம்` எனவும், `தஞ்சைவாணன் வெற்பிற் சேய்` எனவும் மாறுக. ஈற்றசை ஏகாரமொன்றும் ஒழித்து, ஏனைய ஏகாரமெல்லாந் தேற்றத்தின்கண் வந்தன. நெஞ்சம்; மன்னிலையெச்சம். `அச்சேயனையான் சொன்ன` என்பது இடைநிலை விளக்கு. |
(52) |
இகழ்ந்ததற்கிரங்கல்: |
இகழ்ந்ததற்கு இரங்கல் என்பது, தலைவி பேரழகைக் கண்டு பாங்கன் காணா முன்னம் எம்பெருமானை அறிவின்றி இகழ்ந்தனம் என்று இரங்கிக் கூறல்.
|
| கொலைகா லயிற்படை நேரியர் கோன்அகங் கோடவங்கைச் சிலைகால் வளைத்துந் திருத்திய வாணன்தென் மாறைவெற்பில் முலைகால் கொளக்கண் டிளைத்தநுண் நூலிடை முற்றிழைகண் வலைகால் பிணிப்பவந் தார்வருந் தாரல்லர் மாலுழந்தே.
|
(இ-ள்.) நெஞ்சமே! கொல்லுந் தொழிலை உமிழ்கின்ற வேற்படையையுடைய சோழனது உள்ளம் மாறுபட அழகிய கைச்சிலையைக் காலால் வளைத்து, அம்மாறுபாட்டைத் திருத்திய வாணனது தென்மாறை வெற்பிடத்து, முலையிடங் கொள்ளக் கண்டதனால் இளைத்த நுண்ணிய |