தஞ்சைவாணன் கோவை
78

 
நூல்போன்ற   இடையையும்,   அணியும்  அணியினிற் றாழ்வின்றி முற்றுப்பெற்ற
அணியையும்  உடையாளது கண்ணாகிய  வலை காலிற் பிணிப்ப வந்தவர் ஆசை
நோயை அனுபவித்து வருந்தாரல்லர் என்றவாறு.

எனவே,  வருந்துவா  ரென்றவா றாயிற்று.    கொலை:  ஆகுபெயர்.  காலுதல் -
உமிழ்தல்.  அயிற்படை - வேற்படை.நேரியர்கோன் - சோழன். அகம் -  உள்ளம்.
கோடல் - மாறுபடல்.அம் - அழகு.`கால்வளைத்து` என்புழி வேற்றுமைத் தொகை.
திருத்தல் - செவ்விதாக்கல். கால்கொளல் - இடங்கொளல். முற்றிழை: அன்மொழித்
தொகை. பிணித்தல் - கட்டல். உழத்தல் - அனுபவித்தல்:

 1`கடலன்ன காமம் உழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்`

என்னுங் குறளானுமுணர்க. நெஞ்சம்: முன்னிலையெச்சம்.
(53)    
தலைவனை வியத்தல்:
தலைவனை   வியத்தல்   என்பது,   பாங்கன்   தலைவி  கண்வலையிற்   சிக்கி
அத்தடையோடுந்  தலைவன் நம்மிடத்து வந்தது வியப்பென்ற அதிசயித்துக் கூறல்.

 தலங்கா வலன்தஞ்சை வாணன்முந் நீர்பொருந் தண்பொருந்தத்
திலங்கார வல்வடக் கொங்கைவெற் பாலிணை நீலவுண்கண்
பொலங்காம வல்லி கடைத்தவப் போது புடைபெயர்ந்து
கலங்கா திருந்ததெவ் வாறெம்பி ரான்தன் கலைக்கடலே.

      (இ-ள்.)  நெஞ்சமே!  இரண்டு  நீலம்போன்ற   உண்   கண்ணையுடைய
பொன்மயமாகிய   காமவல்லிக்கொடி   போன்றவள்,   உலகிற்குக்  காவலனாகிய
தஞ்சைவாணனது      கடலையெதிருந்    தண்ணிய      பொருநையாற்றின்கண்
பிறந்தொளிரும்  முத்துக்களைக்  கோத்த   வலிய   வடம்பூண்ட கொங்கையாகிய வெற்பினாலே கடைந்த அப்போது, அசைந்து   எம்பிரான்றன்  கலைக்கடலானது கலங்காதிருந்த தெவ்வாறு என்றவாறு.
      எனவே,   எனக்கிது  வியப்பாயிருந்ததென்றவா றாயிற்று. தலம் -  உலகு.
பாதலநீர்,  பூதலநீர்,  மீதல நீர் இம்மூன்று நீருங் வடியதால், கடல் முந்நீர் எனப்
பெயராயிற்று. பொருதல் - எதிர்தல்.

பொருந்தம் - பொருநையாறு;      பொருந்    என்னும்    தொழிற்     பெயர்
அஃறிணையாதலின் ஐகாரவீறு பெற்றது. ஆரம் - முத்து. பொருநையாறுங்  கடலும்
எதிர்ந்து   கலந்தவிடத்துப்   பிறத்தலான் `பொருந்தத்து இலங்கு ஆரம்` என்றார்.
பொலம் - பொன்.


1. குறள். நாணுத்துறவுரைத்தல் - 7.