பாங்கற் கூட்டம்
79

 
 1`பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுண் மருங்கிற் றொடரிய லான`

என்பதனாலறிக.

காமவல்லி - கற்பகத்திற் படருங் கொடி :ஆகுபெயர் கடைதல் - ஈண்டு அறிவைச்
சுழலச் செய்தல்.  புடைபெயர்தல் - அசைதல்.     கலைக்கடல் - கல்வியறிவாகிய
கடல், நெஞ்சம் : முன்னிலையெச்சம்.
(54)    
தலைவியை வியத்தல்:
தலைவியை வியத்தல் என்பது, தலைவியைப் பாங்கன் வியந்து கூறல்.

 வெங்கோல் மழைபொழி வானவர் போர்வென்ற மீனவர்தம்
செங்கோல் முறைமை செலுத்திய வாணன்தென் மாறைவெற்பில்
நங்கோன் மெலிய நலிகின்ற காமவெந் நஞ்சினைப்
பைங்கோல் மணிவளை யார்தணி யாரல்லர் பார்வைகொண்டே.

      (இ-ள்.)   நெஞ்சமே!   இரண்டு  நீலம்போன்ற  உண்  கண்ணையுடைய
பொன்மயமாகிய   காமவல்லிக்கொடி  போன்றவள்,   உலகிற்குக்   காவலனாகிய
தஞ்சைவாணனது     கடலையெதிருந்      தண்ணிய    பொருநையாற்றின்கண்
பிறந்தொளிரும்  முத்துக்களைக்  கோத்த   வலிய  வடம்பூண்ட கொங்கையாகிய வெற்பினாலே கடைந்த அப்போது, அசைந்து  எம்பிரான்றன்   கலைக்கடலானது கலங்காதிருந்த தெவ்வாறு என்றவாறு.

      வெங்கோல் - அம்பு.      வானவர் - சேரர்.      மீனவர் - பாண்டியர்.
இறைமைத்தன்மை யுடையராதலால்  உயர்த்தக் கூறியது.   செங்கோல் - செவ்விய
நீதி. நலிதல் - வருத்தல்.    கோல் - வளையிற்புள்ளி,     கோலம்     என்பது
கடைக்குறையாய்க் கோல் என நின்றதென்பாருமுளர்.நெஞ்சம் : முன்னிலையெச்சம்.

      இச்செய்யுளில்     வியத்தற்பொருண்மை     வந்தது     எங்ஙனமெனின்,
எம்பெருமான்   இறந்துபடாமற்  காத்து  இன்றுங்  குறியிடத்துத்  தனித்து   வந்து
நிற்றலின்,   இவர்   பார்வைகொண்டு   தணிப்பாரெனக்  கூறியது வியப்பின்மேல
் நின்றது.

இவ்வைந்து பாட்டும் பாங்கன் தன்னுட் கூறியது.
(55)    

1. தொல். எழு. புள்ளிமயங்கியல் - 61.