பாங்கற் கூட்டம்
83

 
பாங்கியொடு வருகெனப் பகர்தல்:
      பாங்கியொடு   வருகெனப்  பகர்தல்   என்பது,  இனி நீ வருங்கால் நின்
உயிர்ப்பாங்கியொடு வருக எனக் கூறல்.


என்கா தலினொன் றியம்புகின் றேனிங் கினிவருங்கால்
நின்கா தலியொடு நீவரல் வேண்டு நிலமடந்தை
தன்கா தலன் தஞ்சை வாணன்தென் மாறைத்தண் தாமரைவாழ்
பொன்காதல் கொண்டு தொழுங்சிலம் பாரடிப் பூங்கொடியே.

      (இ-ள்.)  நிலமடந்தை   தனக்குக்   கணவனாகிய  தஞ்சை    வாணனது
தென்மாறை   நாட்டிலிருக்கும்   தண்ணிய   தாமரையில்   வாழுந்    திருமகள்
ஆசைகொண்டு  பணியுஞ் சிலம்பார்ந்த  அடிகளையுடைய பூங்கொடி  போல்வாய்!
எனது காதல் மிகுதியால் ஒரு சொல் சொல்லுகின்றேன். இக்குறியிடத்து  இனிமேல்
வருங்கால்  நின்னிடத்திற்  காதலுடையவளாகிய உயிர்ப்பாங்கியொடு நீ வருதலைச்
செய்ய வேண்டும் என்றவாறு.

காதல் - ஆசை.   இயம்பல் - சொல்லல்.   காதலி - உயிர்ப்பாங்கி.  காதலன் -
கணவன். பொன் - திருமகள். பூங்கொடி : ஆகுபெயர். `நிலமடந்தைதன்  காதலன்`
என்றது, பூவைநிலையென்னும் புறப் பொருளிலக்கணத்தால், வாணனை
மாயோனாகக் கூறியவாறு உணர்க. என்னை,

 1`மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பில்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்`

என்னும் வெட்சிக்கரந்தையிற் கூறிய சூத்திரத்தான் உணர்க.
(61)    
பாங்கிற்கூட்டல்:
பாங்கிற்கூட்டல்   என்பது,   தலைவன்   தலைவியை  ஆயத்துச்   செலுத்துதல்.

 என்னூடு நின்ற விளங்கொடி யேசங்க மேய்ந்துகுழாந்
தன்னூடு செல்லும் சலஞ்சலம் போல்தஞ்சை வாணன் வெற்பில்
பொன்னூடு செல்லும் புகழ்மணி போனின் புடையகலா
மின்னூடு நுண்ணிடை யாருட னீசென்று மேவுகவே.

      (இ-ள்.)  என்னுள்ளே   நிலையாய்  நிற்கின்ற  இளங்கொடி  போல்வாய்!
சங்கக்கூட்டத்துள்ளே   பொருந்திச்  செல்லாநிற்குஞ்  சலஞ்சல மென்னுஞ்  சங்கு
போலவும். தஞ்சைவாணனது  வெற்பிடத்துப்   பொன்னுள்ளே செல்லும் மாணிக்கம்
போலவும், நின் பக்கம் அகலாத மின்பிணங்கும் நுண்ணிய


1. தொல். பொருள். புறத்திணையியல் - 5.