|
|
முல்லைமாலை சூட்டி வந்ததைக் கண்டு வினாவினாளென்று தலைவிக்குத் தோன்றவும், இதழ் வெண்மைக்கும், கண் செம்மைக்கும், முல்லைமாலை யுவமையாகப் பாங்கி கருதிக் கவர்படுபொருளாய்ச் சொல்லலின், மெய்யினாற் பல கவர்படு பொருள் சொல்லி நாடலாயிற்று. நாடல் - ஆராய்தல். இதழ் வெளுத்தல் அதரபானத்தாலும், கண் சிவத்தல் இறுகத் தழுவுதலானும் தோன்றியவென்று உணர்க.
|
(65) |
சுனைவியந்துரைத்தல்: |
சுனைவியந்துரைத்தல் என்பது, அச்சுனை வியப்பை யானும் ஆடிக்காண்பேன் என்று கூறல்.
|
| மறலா யெதிர்ந்த மறமன்னர் வேழ மலையெறிவேல் திறலார் முருகன் செழுந்தஞ்சை வாணன்தென் மாறைவையை அறலார் குழலாய் நுதற்குறு வேர்வு மழகுநின்போற் பெறலா மெனிற்குடை வேனடி யேனம பெருஞ்சுனையே.
|
(இ-ள்.) மதிமயக்கமா யெதிர்ந்த வீரமன்னரது யானையாகிய மலையை யெறியும் வேலால் (முன் மலையையெறிந்த) வெற்றி யார்ந்த முருகனை யொக்குஞ் செழுந்தஞ்சைவாணனது தென் மாறை நாட்டில் வரும் வையையாற்றிலிருக்கும் அறல் போன்ற சூழலையுடையாய், நுதற்குறுவேர்வும் அழகும் நினைப்போற் பெறலாமெனின், அடியேனும் பெருஞ்சுனையை ஆடிக்காண்பேன் என்றவாறு.
|
மறல் - மயக்கம். மற மன்னர் - வீரமன்னர். திறல் - வெற்றி. அறல் - கருமணல். குடைதல் - நீராடுதல். `பெறலாமெனில்` என்பது பெறுதற்கு அருமைதோன்ற நின்றது, தான் குற்றேவல் செய்யும் முறைமையால், `அடியேன்` எனக் கூறினாளென்று உணர்க.
|
(66) |
பொய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடலின் தகையணங்குறுத்தல்: |
தகையணங்குறுத்தல் என்பது தலைவி வேற்றழகினால் அவளைத் தெய்வப் பெண்ணாக வலியுறுத்திக்கூறல்.
|
| குவளை சிவத்துக் குமுதம் வெளுத்த குறையல்லவேல் அவளைமறைத்துன்னைக் காட்டலு மாமலர்த் தேன்குதிக்கத் தவளை குதிக்குந் தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன்வெற்பில் இவளை வரக்கண்டு நீயணங் கேபின் எழுந்தருளே.
|
(இ-ள்.) குவளையொக்குங் கண்சிவந்து குமுதமொக்கும் வாய்வெளுத்த குறைபாடல்லவாயின், எங்கள் தலைவியொருத்தி யுண்டு, அவள் வடிவில் |