பாங்கி மதியுடன்பாடு
93

 
குறையுறவுணர்தல்
பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுத்தல்:
      பெட்டவாயில்  பெற்று இரவு வலியுறுத்தல் என்பது, இயற்கைப் புணர்ச்சிப்
பின்னர்ப்   பிரிவுழிக்கலங்கலின்   வாயில்   பெற்று   உய்தல்   என   ஆண்டு
விரும்பப்பட்ட பாங்கியைத் தூதாகப் பெற்றுக் குறையிரத்தலை வலியுறுத்திக் கூறல்.

 பொருமணி வெண்டிரைப் பைங்கடல் வங்கம் பொருந்திமுன்பு
தருமணி பின்பெற் றணிபவர் போற்சென்று சார்ந்திரந்து
பருமணி நன்கலப் பாங்கியை நீங்கியப் பாவையைநாம்
மருமணி வண்டுறை தார்வாணன் மாறை மருவுதுமே.
     (இ-ள்.) வெண்டிரை   முத்துக்களைப்   பொரப்பட்ட   பசிய  கடலிடத்து
மரக்கலத்தை   முன்பு   பொருந்திப்   பின்  அக் கடல் தரப்பட்ட  மணிகளைப்
பூண்பவர்போல்,   நாம்   போய்ப்   பரிய    மணிகளைக்   குயிற்றிய    நல்ல
அணிகளையணிந்த   பாங்கியைச் சார்ந்து நமது குறையையிரந்து, அவள்  நேர்ந்த
பின் பாங்கியை நீங்கி அப் பாவை போல்வாளை மணம் பொருந்திய கரிய வண்டு
உறையப்பட்ட தாரணிந்த   வாணன்   தென்மாறை  நாட்டுக் கூடுதும், நெஞ்சுமே!
அஞ்சல் என்றவாறு.

     `வெண்டிரை மணிபொரு` என   மாறுக.   வெண்டிரை - வெண்மை  நிறம்
பொருந்திய   அலை. மணி - முத்து. வங்கம் - மரக்கலம். நன்கலம் - நல்லவணி.
`நாஞ்சென்று`  எனவும் `பாங்கியைச் சார்ந்து` எனவும் மாறுக. மரு - மணம். மணி
வண்டு - கருவண்டு.   தார் - மாலை. நெஞ்சம்:   முன்னிலையெச்சம்; மாறைநாட
கடலாகவும்,  பாங்கி   மரக்கலமாகவும்,  தான்  மரக்கல  நாயகனாகவும், தலைவி
அக்கடலிடத்திருக்கும்   மணியாகவும்   உவமித்தவதனால்  இது   தொழிலுவமம்.

 1`நிரனிறை கண்ண மடிமறி மொழிமாற்
றவைநான் கென்ப மொழிபுண ரியல்வே`

என்னுஞ் சூத்திரவிதியால் மொழிகள் மாறிநின்றன.
(69)    

1. தொல். சொல். எச்சவியல் - 8.