|
|
ஊர்வினாதல்: |
ஊர்வினாதல் என்பது, தலைவன் கண்ணியும் தழையும் ஏந்திக் குறையுற்றான்போல வந்து நின்று ஊர் வினாதல்.
|
| புதியேன் மிகவிப் புனத்திற்கி யான்றனிப் போந்தனனும் பதியேது செல்லும் படிசொல்லு வீர்படி மேற்படித்த மதியேய் சுதைமதில் சூழ்தஞ்சை வாணன்தென் மாறைவையை நதியேய் சுழிநிக ரும்பழி தீருந்தி நல்லவரே.
|
(இ-ள்.) புவியின்மேற் படிந்த மதியை யொப்பாகிய கதையினால் விளங்கிய மதில் சூழ்ந்த தஞ்சைவாணனது தென்மாறை நாட்டின்கண் வருகின்ற வையைநதியிற் பொருந்திய சுழியை யொக்குங் குற்றந்தீர்ந்த உந்தியையுடைய மடவாரே! யான் இப் புனத்திற்கு மிகவும் புதியேன், ஒருகாலும் வந்தறியேன், இப்போது தனியாக வந்தேன், நீரிருக்கும் பதி யாது? யான் சொல்லும்படிக்குச் சொல்லுவீர் என்றவாறு. |
படி - புவி. ஒப்பு. சுதை - வெண்சாந்து. ஏய் - பொருந்துதல். உந்தி - பொப்பூழ். நல்லவர் - மடவார். (70)
|
பெயர் வினாதல்: |
| கரைத்தாவி யுந்திய காவிரி வைகிய காலத்தினும் தரைத்தாரு வன்னசெந் தண்ணளி வாணன் தமிழ்த்தஞ்சைசூழ் வரைத்தாழ் சிலம்பினும் வாழ்பதி யீதென்று வஞ்சியன்னீர் உரைத்தா லிழிவதுண் டேற்பெய ரேனும் உரைமின்களே.
|
(இ-ள்.) கரையைத் தாவித் திரையை யெறிந்த காவிரி வற்றிய காலத்தினும் பூமியின்கண் கற்பகத் தருவையொத்த செவ்விய அருளையுடைய வாணனது இனிமை பொருந்திய தஞ்சையைச் சூழ்ந்த மலைகள் பணியப்பட்ட பொதியவெற்பில் நும்முடைய வாழ்வாகிய பதி யீதென்று உரைத்தால் உமக்கு இகழ்ச்சி வருவதுண்டேல், வஞ்சிக் கொம்பு போல்வீர், பெயராயினும் உரைமின்கள் என்றவாறு.
|
தாவுதல் - கடத்தல். உந்தல் - எறிதல். காவிரி - காவேரி. வைகல் - வற்றல். தரை - புவி. தாரு - கற்பகத்தரு. செந்தண்ணளி - செவ்விய அருள். தமிழ் - இனிமை. வரை - மலை; சாதியொருமை. தாழ்தல் - பணிதல். சிலம்பு - ஈண்டுப் புதிய வெற்பு. இழிவது - குறைவருவது.
|
`வரைத்தாழ் சிலம்பின்` என்புழி, ஐகார ஈற்றுப் பெயராகலான், `வரைதாழ் சிலம்பு` என இயல்பாய் முடியாது, ஒற்றுமிக்கவாறு என்னையெனின்,
|