|
|
வனம் - காடு. ஆர்தல் - பொருந்தல். குடிஞை - கூகை. பகை - காக்கை. குளிர் - தினைப்புனத்திற் கிளியோட்டுவோர் மூங்கிலில் வீணைபோற் கட்டித் தெறிக்குங் கருவி. |
1`தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங் கிளிகடி மரபின்` என்னும் பத்துப்பாட்டில், `குளிரும்` என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறிய வுரையிற் கண்டு கொள்க. குளிர் எனினும், குளிரி எனினும் ஒக்கும். புடைத்தல் - விரலாற் றெறித்தல். கிள்ளை - கிளி. ஏனல் : ஆகுபெயர். கனம் - முகில். மா - கருமை. கனங்குழல் என்புழி உவமைத்தொகை. `கனமா நறுங்குழல்` பாரமாகிய நறிய குழல் எனினும் அமையும். `என்பதற்கு` வேற்றுமை மயக்கம். ஓகாரம் : வினா.
|
(73) |
யாரே யிவர்மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்: |
யாரே இவர்மனத்து எண்ணம் யாது எனத் தேர்தல் என்பது, இவ்வாறு கண்ணியும் தழையும் ஏந்தி, ஊர் பெயர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவி நின்றவர் யாரோ, இவர் மனத்து எண்ணம் யாதோ எனப் பாங்கி தன் மனத்தில் ஆராய்தல்.
|
| 1தரையார வண்புகழ் தேக்கிய வாணன் தமிழ்த்தஞ்சைசூழ் வரையாது நும்பதி யாதுநும் பேரென்பர் வார்துளிக்கார் புரையானை யம்பொடு போந்தநுண் டோவென்பர் பூங்கொடியீர் உரையாத தென்னென் பராலென் கொலோவிவர் உட்கொண்டதே.
|
(இ-ள்.) தரைநிறைய வளவிய புகழை நிறைத்த வாணனது தமிழ்த் தஞ்சைசூழ்ந்த வரையிடத்து நும்முடைய பதி யாது? நும்முடைய பெயர் யாது? என்றுஞ் சொல்லுவர்; அல்லாமலும், நெடிய துளியைச் சொரியும் மேகத்தையொக்கும் யானை என் கையம்போடு வந்ததுண்டோ? என்றுஞ் சொல்லுவர்; அன்றியும், பூங்கொடி போல்வீர்! யாதும் உரையாதது என் என்றுஞ் சொல்லுவர்;ஆதலால், இவர் யாரோ, இவர் உட்கொண்ட எண்ணம் என் கொல்லோ, அறிகின்றிலேன் என்றவாறு.
|
தரை - பூவுலகம். ஆர - நிறைய. வண்புகழ் - வளவிய புகழ். தேக்கல் - நிறைத்தல். தமிழ் - இனிமை. வரை - மலை. `பதி யாது`, `பேர் யாது` என மாறுக. வார் - நெடுமை. துளிக் கார் - துளிசொரியுங் கார். புரை: உவமவுருபு.
|
`போந்தது` - `வந்ததோ வொருபோர்க் களிறே` என்ற தலைவன் முன் வினாவிய சொல்லையே பாங்கி யீண்டு, `யானை அம்பொடு போந்ததுண்டோ` என்று அப்பொருளையே யெடுத்துக் கூறினமையால்,
|
|
1. குறிஞ்சிப்பாட்டு - 43. |