தஞ்சைவாணன் கோவை
98

 
`வந்தது` என்னும்    பெயராயினவாறு   காண்க.   அன்றியும், `புதியேன்  மிகவிப
் புனத்திற் கியான்றனிப் போந்தனன்` என்பதனானும் உணர்க.

பூங்கொடியீர்:   ஆகுபெயர். உம்மை:   இறந்ததுதழீஇய   எச்சவும்மை விகாரத்தாற்
றொக்கது. கொல்:ஐயம்.   ஓகாரம் :அசை. உட்கொண்டது - உட்கொண்ட எண்ணம்.
(74)    
எண்ணந் தெளிதல்:

1யாரே யிவரென் றறிகின்றி லேமெதிர்ந் தாரைவென்று
வாரேய் கழற்புனை வாணன்தென் மாறை வரையுறைவீர்
ஊரே தெனமுன் வினாவிப்பின் வேறொன் றுரைப்பதெல்லாம்
தேரே யிவள்பொருட் டாலென்று தோன்றுமென் நெஞ்சினுக்கே.

(இ-ள்.) கண்ணியும்   தழையும்  ஏந்திக்   குறையுற்றார்  போல்  வினாவிய இவர்
யாரென்றறிகின்றிலேம்;  போர்க் களத்தில் எதிர்ந்தாரை வென்று கயிறு பொருந்திய
கழலைப் புனைந்த   வாணன்   தென்மாறைநாட்டில்  வந்த இவர்   நம்மைநோக்கி,
வரையுறைவீர்! நுமது  ஊர்  ஏது  என  முன்  வினாவிநின்று பின் வேறொன்றாகச்
சொல்லும்   வார்த்தையெல்லாம்   ஆராய்ந்து  எண்ணில்,  செவ்வனே     இவள்
பொருட்டென்று  என்  நெஞ்சினுக்குத்  தோன்றும். இதற்கு ஐயமில்லை என்றவாறு.

யாரே - ஏகாரம்: ஈற்றசை. வார் - கயிறு. ஏய்தல் - பொருந்தல். கழல் -
வீரக்கழல். புனைதல் - தரித்தல். நேர் - செவ்வை. ஆல்: அசை.
(75)    
குறையுறவுணர்தல் முற்றிற்று.
இருவரு முள்வழி யவன்வர வுணர்தல்
தலைவன் கையுறையேந்தி வருதல்:
தலைவன்  கையுறையேந்தி வருதல் என்பது,  தலைவியும் பாங்கியும் சேர்ந்திருப்பது
கண்டு தலைவன் கையுறை யேந்தி வருதல்.

 தண்டா மரைமலர்ப் பொன்னையும் பார்மங்கை தன்னையும்போல்
வண்டார் குழல்மட வார்மணந் தார்சென்று வாணன்தஞ்சை
நுண்டா தணிபொங்கர் நீழலின் கீழ்ந் நுடங்கிடையார்க்
கண்டா தரவையெல் லாஞ்சொல்ல வேநல்ல காலமிதே.

1. குறிஞ்சிப்பாட்டு - 43.