விநாயகர்
சீர்கொண்ட கற்பகத்தின் வாதாவி நாயகனைத் தில்லை வாழும் கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக் கருத்துள் வைப்பாம் பேர்கொண்ட ஞானநாயகி பாகன் தண்டலை எம் பெருமான் மீதில் ஏர்கொண்ட நவகண்டம் இசைந்த பழமொழி விளக்கம் இயம்பத் தானே.