காப்பு
- 2
வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்
விளம்பியசொல்
மிகு புராணம்
ஏதுவினில் காட்டிய சொல் இலக்கணச்சொல்
இசைந்த
பொருள் எல்லாம் நாடி,
ஆதிமுதல் உலகு அதனில் விளங்கு பழமொழி
விளக்கம்
அறிந்து பாடச்
சோதிபெறும் மதவேழ முகத்து ஒருவன்
அகத்து
எனக்குத் துணை செய்வானே.
|