அவை அடக்கம் வள்ளுவர் நூல் ஆதி பல நூலில் உள அரும்பொருளை வண்மையாக உள்ளபடி தெரிந்து உணர்ந்த பெரியவர்கள் முன் நானும் ஒருவன் போலப் பள்ள முதுநீர் உலகில் பரவு பழமொழி விளக்கம் பரிந்து கூறல் வெள்ளை மதியினன் கொல்லத் தெரு அதனில் ஊசி விற்கும் வினையது ஆமே.