முகப்பு |
தொடக்கம் |
51-60 வரை
|
|
|
51. சாம்
காலம் சங்கரா!
வாங்கு ஆலம் உண்ட செழுந்தண்டலையார்
அடிபோற்றி வணங்கி நாடிப்
போம் காலம் வருமுன்னே புண்ணியம் செய்து
அரிய கதி பொருந்து உறாமல்
ஆம் காலம் உள்ளது எல்லாம் விபசாரம்
ஆகி அறிவு அழிந்து வீணே
சாம் காலம் சங்கரா! சங்கரா!
எனின் வருமோ தருமம் தானே!
|
|
|
உரை
|
|
|
|
|
52. பெற்ற
தாய் பசித்து இருக்க,,,
சுற்றமாய் நெருங்கி உள்ளார் தனை அடைந்தார்
கற்று அறிந்தார் துணைவேறு இல்லார்
உற்ற வேதியர் பெரியோர்க்கு உதவி அன்றிப்
பிறர்க்கு உதவும் உதவி எல்லாம்
சொற்ற நான்மறை பரவும் தண்டலையாரே!
சொன்னேன்! சுமந்தே நொந்து
பெற்ற தாய் பசித்து இருக்கப் பிராமண
போசனம் நடத்தும் பெருமை தானே.
|
|
|
உரை
|
|
|
|
|
53. ‘நல்ல
மாட்டுக்கு ஓர் அடி!'
துன்மார்க்கர்க்கு ஆயிரம் தான் சொன்னாலும்
மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்!
சன்மார்க்கர்க்கு ஒரு வார்த்தை சொலும் அளவே
மெய் அதனில் தழும்பாக் கொள்வார்
பன்மார்க்க மறை புகழும் தண்டலையாரே!
சொன்னேன்! பதமே ஆன
நன்மாட்டுக்கு ஓர் அடியாம்! நற்பெண்டிர்க்கு
ஒரு வார்த்தை நடத்தை ஆமே.
|
|
|
உரை
|
|
|
|
|
54. இரப்பார்க்கு
வெண்சோறு பஞ்சமோ?
கரப்பார்க்கு நல்ல கதி வருவது இல்லை!
செங்கோலின் கடல்சூழ் வையம்
புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கம் அல்லால்
நரகம் இல்லை! பொய் இது அன்றால்!
உரப்பார்க்கு நலம் புரியும் தண்டலையாரே!
சொன்னேன்! ஒருமை ஆக
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சம் உண்டோ?
ஒருக்காலும் இல்லை தானே!
|
|
|
உரை
|
|
|
|
|
55. கொடுங்கோல்
மன்னவன் நாட்டின் ......
படும் கோலம் அறியாமல் தண்டலையார்
திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!
நெடும் கோளும் தண்டமுமாய் வீணார
வீணனைப்போல் நீதி செய்வார்!
கெடும் கோபம் அல்லாமல் விளைவு உண்டோ?
மழை உண்டோ? கேள்வி உண்டோ?
கொடுங்கோல் மன்னவன் நாட்டின் கடும்புலி
வாழும் காடு குணம் என்பாரே!
|
|
|
உரை
|
|
|
|
|
56. கெடுபவர்;
கெடாதார்!
உள்ளவரைக் கெடுத்தோரும் உதவி அற்று
வாழ்ந்தோரும் உறை பெற்றோரும்
தள்ளி வழக்கு உரைத்தோரும் சற்குருவைப்
பழித்தோரும் சாய்ந்தே போவார்!
பள்ள வயல் தண்டலையார் பத்தர் அடி
பணிந்தோரும் பாடினோரும்
பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட
நல்லோரும் பெருகுவாரே.
|
|
|
உரை
|
|
|
|
|
57. அற்பருக்கு
வாழ்வு வந்தால் ......
விற்பனர்க்கு வாழ்வு வந்தால் மிக வணங்கிக்
கண்ணோட்டம் மிகவும் செய்வார்!
சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது
இறுமாந்து துன்பம் செய்வார்!
பற்பலர்க்கு வாழ்வு தரும் தண்டலையாரே!
சொன்னேன்! பண்பு இல்லாத
அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி
குடைமேல் ஆகும்தானே!
|
|
|
உரை
|
|
|
|
|
58. பசுவினையே
வதை செய்து ...
விசையம் மிகும் தண்டலையார் வள நாட்டில்
ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி
வசை பெருக அநியாயம் செய்து பிறர்
பொருளை எலாம் வலிய வாங்கித்
திசை பெருகும் கீர்த்தி என்றும் தன்மம் என்றும்
தானம் என்றும் செய்வது எல்லாம்
பசுவினையே வதை செய்து செருப்பினைத் தானம்
கொடுக்கும் பண்பு தானே!
|
|
|
உரை
|
|
|
|
|
59. சிறியோர்
பெரியோர் ஆகார்
சிறியவராம் முழு மூடர் துரைத்தனமாய்
உலகு ஆளத் திறம் பெற்றாலும்
அறிவு உடையார் தங்களைப்போல் சற்குணமும்
உடையோர்கள் ஆக மாட்டார்;
மறிதரு மான் மழு ஏந்தும் தண்டலையாரே!
சொன்னேன்! வாரி வாரிக்
குறுணி மை தான் இட்டாலும் குறி வடிவம்
கண் ஆகிக் குணம் கொடாதே!
|
|
|
உரை
|
|
|
|
|
60. பிச்சைச்
சோற்றினுக்குப் பேச்சு இல்லை
கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச்
சாதி இல்லை! கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு
ஒருகாலும் நரகம் இல்லை!
கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார்
மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப்,
பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு
இல்லை பேச்சுத் தானே.
|
|
|
உரை
|
|
|
|