முகப்பு |
தொடக்கம் |
61-70 வரை
|
|
|
61. குரங்கின்
கையில் நறும் பூமாலை
பரம் கருணை வடிவு ஆகும் தண்டலையார்
வள நாட்டில் பருவம் சேர்ந்த
சரம் குலவு காம கலைதனை அறிந்த
அதி ரூபத் தையலாரை
வரம்பு உறு தாளாண்மை இல்லா மட்டிகளுக்கே
கொடுத்தால் வாய்க்குமோ தான்?
குரங்கினது கையில் நறும் பூமாலை
தனைக் கொடுத்த கொள்கை தானே!
|
|
|
உரை
|
|
|
|
|
62. அரிசி
உண்டேல் வரிசை உண்டாம்!
பிரசம் உண்டு வரி பாடும் தண்டலையார்
வளநாட்டில் பெண்களோடு
சரசம் உண்டு! போகம் உண்டு! சங்கீதம்
உண்டு! சுகம் தானே உண்டு இங்கு
உரை சிறந்த அடிமை உண்டோ? இடுக்கண் உண்டோ?
ஒன்றும் இல்லை! உலகுக்கு எல்லாம்
அரிசி உண்டேல் வரிசை உண்டாம்!அக்காள் உண்டு
ஆகில் மச்சான் அன்பு உண்டாமே!
|
|
|
உரை
|
|
|
|
|
63. முழுப்
பூசணிக்காய் மறைத்தல்
தத்தை மொழி உமை சேரும் தண்டலையார்
பொன்னி
வளம் தழைத்த நாட்டில்
வித்தக மந்திரி இல்லாச் சபைதனிலே
நீதி
இல்லை! வேந்தர்க்கு எல்லாம்
புத்தி நெறி நீதி சொல்லு மந்திரி அல்லாது
ஒருவர்
போதிப்பாரோ!
நித்தலும் உண் சோற்றில் முழுப் பூசணிக்காய்
மறைத்ததுவும்
நிசம் அது ஆமே!
|
|
|
உரை
|
|
|
|
|
64. ‘பூசை
வேளையிலே கரடி'
நேசமுடன் சபையில்வந்தால் வேளை அறிந்து
இங்கிதமா
நிருபர் முன்னே
பேசுவதே உசிதம் அல்லால் நடுவில் ஒரு
வன்குழறிப் பேசல் எல்லாம்
வாசம் மிகும் தண்டலை நீள் நெறியாரே!
அபிடேக மலி நீராட்டிப்
பூசை பண்ணும் வேளையிலே கரடியை விட்டு
ஓட்டுவது போலும் தானே.
|
|
|
உரை
|
|
|
|
|
65. தன்வினை
தன்னைச் சுடும்
மண் உலகில் பிறர் குடியை வஞ்சனையில்
கெடுப்பதற்கு
மனத்தினாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே
கெடுவன்
என்பது உண்மை அன்றோ?
தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீள்
நெறியாரே! தெரிந்து செய்யும்
தன்வினை தன்னைச் சுட ஓட்டு அப்பம் வீட்டைச்
சுடவும் தான் கண்டோமே.
|
|
|
உரை
|
|
|
|
|
66. தாயைப்
பழித்து மகள் .....
முன் பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி
தனைப்
பழித்து, முரணே பேசிப்
பின் பலரை உடன்கூட்டி நூதனமா
நடத்துவது
பிழைபாடு எய்தில்
துன்பு அறியாக் கதி அருளும் தண்டலைநீள்
நெறியாரே!
தூயள் ஆகி
அன்புள தாயைப் பழித்து மகள்ஏதோ
செயத் தொடங்கும் அறிவு தானே.
|
|
|
உரை
|
|
|
|
|
67. வெண்ணெய்
இருக்க நெய் தேடல்!
தண் அமரும் மலர்ச் சோலைத் தண்டலைநீள்
நெறியே! நின் தன்னைப் பாடில்
எண்ணமிக இம்மையினும் மறுமையினும்
வேண்டியது உண்டு இதை ஓராமல்,
மண்ணின்மிசை நரத் துதிகள் பண்ணி அலைந்தே
திரி பாவாணர் எல்லாம்
வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய் தேடிக்
கொண்டு அலையும் வீணர் தாமே.
|
|
|
உரை
|
|
|
|
|
68. ஏழைக்குத்
தெய்வமே துணை
அந்தணர்க்குத் துணை வேதம், அரசருக்குத்
துணை
வயவாள், அவனி மீது
மைந்தர்க்குத் துணை தாயார், தூதருக்குத்
துணை,
மதுர வார்த்தை அன்றோ?
நந்தமக்குத் துணையான தண்டலைநீள்
நெறியாரே
நண்பர் ஆன
சுந்தரர்க்குத் துணை, நாளும் ஏழையர்க்குத்
தெய்வமே துணை என்பாரே.
|
|
|
உரை
|
|
|
|
|
69. அஞ்சாதவர்!
போர் அஞ்சார் அதிவீரர்! பொருள் அஞ்சார்
விதரணம்சேர்
புருடர்! தோயும்
நீர் அஞ்சார் மறைமுனிவர்! நெருப்பு அஞ்சார்
கற்பு
உடைய நிறைசேர் மின்னார்!
வார் அஞ்சா முலை இடம் சேர் தண்டலையாரே!
சொன்னேன்
மதமா என்னும்
கார் அஞ்சாது இளஞ்சிங்கம் கனத்த வலியாம்
தூதன் கால் அஞ்சானே.
|
|
|
உரை
|
|
|
|
|
70. ஒழியாதவை
உபசாரம் செய்பவரை விலக்கிடினும்
அவர்
செய்கை ஒழிந்து போகா
தபசாரம் செய்வாரை அடித்தாலும்
வைதாலும் அது நில்லாது!
சுபசாரத் தண்டலையார் வள நாட்டில்
திருடருக்குத்
தொழில் நில்லாது!
விபசாரம் செய்வாரை மேனி எல்லாம்
சுட்டாலும் விட்டிடாரே.
|
|
|
உரை
|
|
|
|