2. கடும்
தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்
தண்டலையார் அடிபணிந்து
தவம் தானம்
உபகாரம் தருமம் செய்து
கொண்டபொருள் விலைவாசி காணி தேடிக்
கோடி கொடுப்பது அல்லால்
வண்டருமாய் ஒன்று பத்து விலை கூறி
அநியாய வட்டி வாங்கிக்
கண்டவர்தம் கடும்தேட்டுக் கண்ணை அறக்
கெடுக்கும் இது கருமம் தானே.
|