5. இல்லது
வாராது; நமக்கு உள்ளது போகாது
வல்லமையால் முடிவது உண்டோ? தலைகீழாய்
நின்றாலும் வருவது உண்டோ?
அல்லதுதான் அவன் செயலே அல்லாமல்
தன் செயலால் ஆவது உண்டோ?
புல் அறிவால் மயங்காமல், தண்டலையார்
அடிபணிந்து, புத்தி உண்டாய்,
இல்லது வாராது! நமக்கு உள்ளது போகாது
எனவே இருக்கலாமே.
|