11.
எறும்பு எண்ணாயிரம்
குறும்பு
எண்ணாது உயர்ந்த நல்லோர் ஆயிரம் சொன்னாலும்
அதைக்
குறிக்கொளாமல்
வெறும் பெண்ணாசையில் சுழல்வேன் மெய்ஞ்ஞானம்
பொருந்தி
உனை வேண்டேன்! அந்தோ!
உறும் பெண்ணார் அமுது இடம்சேர் தண்டலைநீள்
நெறியே!
என் உண்மை தேரில்
‘எறும்பு எண்ணாயிரம் அப்பா! கழுதையும் கை
கடந்தது
எனும்' எண்ணம் தானே!
|
|