13.
காட்டுக்கே எறித்த நிலா!
மேட்டுக்கே
விதைத்த விதை, வீணருக்கே
செய்த
நன்றி, மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே
தேடிஇட்ட
வண்மை எல்லாம்
பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்
வீதிதொறும்
பரப்பி டாமல்
காட்டுக்கே எறித்தநிலா, கானலுக்கே
பெய்த
மழை கடுக்கும் தானே! |
|