15.
மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லை
உழை
இட்ட விழிமடவார் உறவு விட்டும்
வெகுளி
விட்டும் உலக வாழ்வில்
பிழைவிட்டும் இன்னம்இன்னம் ஆசைவிடாது
அலக்கு
அழியப் பெற்றேன்! அந்தோ!
தழை இட்ட கொன்றைபுனை தண்டலைநீள்
நெறியே!
என் தன்மை எல்லாம்
மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லையாய்
இருந்த
வண்மை தானே. |
|