16.
துர்ச்சனப் பிள்ளைக்கு...
கொச்சையில்
பிள்ளைக்கு உதவும் தண்டலையார்
வளநாட்டில்
கொடிதாய் வந்த
வச்சிரப் பிள்ளைக்கு முனம் மாதவனே
புத்தி
சொன்னான்! வகையும் சொன்னான்!
அச்சுதப் பிள்ளைக்கும் அந்த ஆண்டவரே
புத்தி
சொன்னார்! ஆதலாலே
துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார்
என்றே
சொல்லுவாரே! |
|