17.   பொறுத்தவரே அரசு ஆள்வார்

கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார்
   வளநாட்டில் கடிய தீயோர்
குறித்து மனையாள் அரையில் துகில் உரிந்தும்
   ஐவர் மனம் கோபித்தாரோ!
பறித்து உரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்
   அடித்தாலும் பழி செய்தாலும்
பொறுத்தவரே அரசு ஆள்வார்! பொங்கினவர்
   காடாளப் போவார் தாமே.
உரை